ஒரே ஒரு துளி

ஒரே ஒரு துளி .

கண்ணின் இமைக்குள்ளே கட்டிவைத்து
தான் பழக்கம் ,அவிழ்த்துவிட்டது
பாவமாகிவிட்டது,
மெதுவாக ஊர்ந்து செல்கிறது என்
சொகுசு நான்கு சக்கரம்

யார்காகவோ பழகிய வார்த்தையெல்லாம்
இடறு செய்கிறது ,
நெய்தல் நிலம் போல்
மனமோ குளிக்க ,
துடிக்கிறது அடிக்கடி வரும் காற்று ...

இங்கேதான் பிறந்தேனோ
என எட்டிபார்க்கும் மனித குணம் ,
என்னையே கேள்வி கேட்கிறது ,
கடன் பெற்ற நிமிடமெல்லாம் மெதுவாக பறக்க,
கடந்து போகிறேன் நான் செல்லும் பாதையை ,,

வழிதோறும் எட்டாகனிகளாய் இருந்த
கடைகள் என்னை அழைக்க ,
திரும்பாத கழுத்தை கொண்டு முன்னேறுகிறது கால்கள் ,

ஏட்டிலே படித்த யாவும் நெஞ்சிலே நிற்கவில்லை ,
எழுதிய வாசகமும் மனதிலே பதியவில்லை ,
எட்டுசுரக்காய் எதுக்கோ உதவாதது போல்
ஒரு படிப்பு ,
எங்கே படித்தோம் ,,,
மறந்தே விட்டது ,

மறக்கமுடியாத தோள்களின் மத்தியிலே
மறந்தே விட்டது ,,
நான் அன்று இருந்த நிலையை கண்டு
பரிதாபம் கண்ட ஒரு உள்ளம்
காண இங்கே வந்து உள்ள
என் உள்ளம் ,,,
கனவு தேசமாக என் மனம்
படபடக்க கால்களோ நெருங்கிவிட்டது
தோழனின் இல்லத்தை ,,

தலை இடிக்கும் ஓலை வாசல்
வெளியே தெரியும் வீடு உரசல் ,
கண்களின் கண்ணீர் வந்தது ,
தலை இடித்தால் அல்ல ,,
தலை குனிந்ததால் ,
ஒருவேளை நான் இருந்தால்
ஒருவேளையாவது அவன் உண்டு இருப்பான் ,,
என்னை கண்டதும் நெளியும்
புழுபோல் அவன் நிற்க ,

ஆடும் குவளை நீர் வந்தது
கொடி அணிந்த கைகள் ,கிழியல் சேலைகள்
தெரியகூடாது என மூடல் வேறு ,

அவன் கேட்ட ஒருவார்த்தை
என் மனதை நெகிழவைத்தது ,
மச்சான் எப்டி இருக்க ,
நான் நல்ல இருக்கேன் டா ,
எனக்கு என்ன குறை ,,

நான் கேட்ட ஒரு வார்த்தை
என்னை மறந்துவிட்டாயடா ,,
நண்பன் நான் இல்லையா உமக்கு ,,,
அவன் கண்களிலே சிந்திய
ஒரே ஓர் துளி ,,
அவன் உறவையும்
கலங்க வைத்தது ,,,
சொல்லேதும் சிக்கவில்லை
நட்பின் பார்வைகளிடையே ,,,

உண்மை தோள்களுக்கு சமர்ப்பணம் ,,
கவியரசன் ,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு