நிலவிலே இருட்டு

நிலவிலே இருட்டு

கண்கள் தான் வெளிச்சமாய்
இருக்கே ,இடையே ஒரு கரும்புள்ளி
இல்லாவிட்டால் பார்க்க முடியாது போலும் ,
வாழ்கையே இது தானே ,

திருத்தி எழுதிய தலை எழுத்தாய்
நெஞ்சின் மருமுனையிலே
பேனாவும் இடம்பிடிக்க
உதவாது என்ற பேரும்,
உதவாது ஆனது ,,

கலங்கபடமாய் நான் இருக்க
எங்கே தெரிந்தது
குடும்ப சூழல் ,
எதிரே ஒரு பெண் சென்றாலும்
பின்னே என் கண் சென்றாலும்
பழிபாவம் மட்டும் எந்தன் மேலே ,
கண்ணை அடைக்க கருவி உண்டோ

எழுதுகோலின் முனையிலே
உலகம் இருப்பதை நேற்றே கண்டேன்
உலக வரைபடத்திலே
நான் சென்ற நாடுகளை
குறிப்பெழுதும் போது ,

நல்லவன் தான் நான்
எனினும் ,உலகம் என்னை
வேறாக பார்ப்பது ஏனோ
வித்தியாச  நிலைமை ,

கழுகும் களிப்புடன்
நோக்க செல்கிறது
மிதந்து செல்லும் விமானம் ,

கனவு என்று கில்லி பார்த்தேன்
ஐயோ மாற்றி கில்லிவிட்டேன்
அருகில் இருந்த அழகியை ,
புரிந்தது நான் என்ன நிலைமையில்உள்ளேன் என்பது

என் வீட்டிலே இருந்து பார்க்க
எல்லா வீடுகளும் தெரியும் உயரமாக

மூவேளை உணவென்பது
வருடத்தில் வரும் நல்ல நாட்களில்
எதோ ஒன்றில் மட்டுமே கிட்டும்
அன்னதானம் மூலமே ,,

கண்ணீர் கண்ணை கொப்புளிக்க
அழுத நாட்கள் கணக்கே இல்லை ,
வெறியுடன் படித்து மதிப்பெண் எனும்
மூட்டையினை முதிகிலே
சுமந்து ,உழைத்த பிறகு தான் புரிகிறது
யாராலும் கோடிஸ்வரன் ஆகஇயலும்
என்பது ,என்ன செய்வது
நிம்மதி மட்டும் தொலைத்து விட்டேன்

இருப்பதில் இல்லாததை செய்தால் தான்
உறக்கம் வருகிறது ,

பிறக்கும் என் பிள்ளைக்கு
வறுமை என்பதே தெரியாத நிலைதான்
என்னிடம் இப்போது ,

தினம் வரும் நிலவிலே
பாதி இருட்டு தான்,
நிலவின் இரட்டை உணர்ந்தவன் ,
உலகாள்வான் ,,,
கவி  

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு