கண்ணீர் மட்டுமே மிச்சம்

கண்ணீர் கலந்து வியர்வை
தெளித்து ,பட்டுபோகும்
முல்லை  கொடியாக
நெய்தல் வழிந்திட
குறிஞ்சி பொழிந்திட
மருதம் அழிந்திட ,,,
பாலை ஆகும்
விவசாயி நெஞ்சம்

பார்வை பட்டு ,
விரல் பட்டும்
துளிர்த்திடும் குருந்தழை
மணிகள் ,,,
பாழாய் போன
மழை பட்டு
அழிந்தால் என் செய்வேன் ,

கடன் பட்டு
அடி பட்டு
வளர்த்த நெல்  கதிர்
வீணாய் போன காற்றிலே
கொட்டினால் தான்
நான் என் செய்வேன் ,

கந்துவட்டி
கழுத்தினை நெரித்திட,
காணமல் போகும்
கொஞ்ச நெஞ்ச
மானம் எல்லாம் ஒருசேர
கழன்டோட ,,
வண்டிமாடுகள் போல்
அடிமட்ட பயணம் ,,,

எதோ எதோ பெய்திடும்
மழைகொண்டு\
பாத்தி அமைத்தால்
நாற்று நடைகூட
கூழி ஆள் இல்லாத
நிலையிலே தரிசாக
போகும் எழிலுரித்த
விளநிலம் ,நான் விழுந்த நிலம்

நன்செய் புன்செய்
என எல்லாம் என்
மனதினை ரணம் செய்ய ,,
போட்ட முதலே திரும்ப வராமல்
விளையாட்டு காட்டுகிறது
விளைந்த விலைபொருள்

மழை பெய்யும் நேரமெல்லாம்
இடுப்புவலி கர்ப்பிணி போல்
வெட்டி துடிக்கிறது
இதயம் ,,
காற்றடிக்கும் பொழுதெல்லாம்
சூரையடிக்கும் இடிபோல
வெக்கி போகிறது
வயிறு ,,,

தினம்தினம் வயிறார
நான் உலவாட
உணவளிக்கும் ஒரு
மேதை உழவாட
சக்கை அறுவாட ,,
ஏன் போகும் ,,வீண் போகும்
கனவெல்லாம் வான் போகும் ,
சொல்லாமல் ஏதிங்கு
நடைபோடும் ,,
பணம் போடும் அட
கோழியுண்டோ ,
தங்க உரம் போடும்
மாடும் உண்டோ ,
வைரம் எடுதூடும்
இங்கே நெல் மணிகளுண்டோ ,

செக்க சிவந்தோடும்
மேனியிலே ,,வியர்வை வழிந்தோடும்
இவண் போலே ,

அல்ல அல்ல பணமிருந்தும்
உண்டிட இயலாதே ,
கொள்ள கொள்ள பசியிருந்தும்
தின்றிட முடியாதே

நல்ல நல்ல துணியிருந்தும்
உடுத்திட முடியாதே ,
வெல்ல கோவணமும்
இங்கே கோர்ட்டு சூட்டு தான் ,,

இருக்க இடம் நெறஞ்சு
வாழ்கை பணம் நெறஞ்சு ,
தோகை உடல் நெறஞ்சு
நிலம் மட்டும்
குறைவதேனடா ,,

பள்ளிகூட வாழ்கையே
பாடமென்று படித்திருந்தேன் ,
பட்டினத்து கேலிக்கு
மத்தியிலே ,வெள்ள வேட்டி
அசிங்கமாகி போனதுன்னு  
 படித்து வந்தேன் ,,
உணவார இங்கே என்
உழைபுண்டு ,நிறம் மாற
தோலோ கருப்புண்டு ,
நிஜமாக வெண்மை மனதுண்டு
அதனுள்ளே ஆயிரம்
வலியும் உண்டு ,
,
காத்திருந்த காலம் வரும் வரை
கண்ணீர் மட்டுமே
விடியல்களில் ,,,
நிலையாகி போனது ,,

கவியரசன் 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு