கல்லறை செல்லும் கனவுகள்

கல்லறை செல்லும் கனவுகள்

படுத்திருந்தே பல நாள்
கழிந்த நிலையிலே,
வெட்கத்துடன் எட்டி பார்க்கிறது
சோம்பேறித்தனம்

பொழுதுகள் முடியும் நேரத்திலே
தொலைக்காட்சியின் முன்னே
தொல்லைகாட்சிகள் ஓடும் தருணத்திலே
வெகுண்டு விழுகிறது மனம் ,

காரணம் இல்லாமல் மேகங்கள் கடக்க
கண்ணில் படும் தொலைவிலே
விழுந்து தொலைக்கிறது
பகல் சூரியன் ,

எட்டிபார்க்கும் தொலைவில் தான்
வெற்றி இருந்தாலும்
எட்ட மறுக்கிறது உடல் ,
பழகிவிட்டது போலும் ,

சுய சிந்தனை கொடிபிடிக்க
பலநேரம் முகதேர்வும்
சென்றதுண்டு ,முகத்தினை கூட
பாராமல் வழி அனுப்புகிறது
அலுவல் ,

கண்டதும் வரும் நோயினை போல ,
இடையிலே காதல் வேறு ,
எனக்கே இங்கு சோறு
இல்லாத போதும் என்னை நம்பியும்
ஒரு ஜீவன் ,மகத்தான காதல்

கண்விழிக்கும் போதெல்லாம்
ராஜ தரிசனம் ,என்ன
கேட்கத்தான் கூசுகிறது காதுகள்
மறுத்துவிட்டன நினைக்குறேன்

தோல்வியின் காரணம் முயலாமை
என்றால் ,முயலக்கூட
வாய்புகள் வருவதில்லை ,
தேடிசென்றாலும் கிடைக்காத போது,
கடவுள் கூட நிதர்சனம் ,

விருந்து படைக்கும் உதடுக்கு
இடையே சிலநேரம்
நீர் சென்று இடம் பிடிப்பதுஉண்டு,
நீர்கட்டிய துணிகளும்
வயிற்றினை இடம்பிடிப்பதும் உண்டு

தெருவில் செல்லும் நாய் கூட
ஏளனமாய் என்னை பார்க்க
தோழனாகவே மாறுகிறது.
ஒரே மரியாதை தானே வீட்டிலே ,,

சிரித்து சிறிதே கடக்கிறது
இடை இடையே செந்நிற
கண்ணீர் போல ,கள்ளியும் ]
நகர்வதுண்டு ,இருக்கும் ஒரே
மகிழ்ச்சியும் அவளாக இருக்க ,
அவளுக்கென ஏதுமில்லை என
நினைக்கும் போதே புரிந்து விடுகிறது
அவளுக்கு ,சிலநேரம் பிரிவது சகஜமாகிறது
கைநினைக்க ,வயிற்றினையும் நினைக்க
மாதம் வாங்கும் சம்பளமும் வாடகையாகிறது
சொந்த வீட்டிலே ,மரபு அது ,,,

எப்படியோ விழுந்து புரண்டு
சேர்ந்தாகிவிட்டது ,வேலைக்காக
தகுதிக்காக வேலை தேடி இருந்தால்
இதுவரை நான் தண்டச்சோறு தான் ,
சோற்றுக்காக தேடியபடியால்
குடும்பஸ்தன் என்ற கிரீடம்
சேர்ந்தது தலையிலே ,,

தலைப்பு வரவில்லை என என்னார்திர்கள்
இதிலே வேலை செல்லாவிட்டால் அவனின்
மீதமுள்ள கனவுகளும் கல்லறை சென்று  இருக்கும்
JUST LIKE THAT ,,,POSITIVE APPROACH,,,HE HE HE

அனுபவம் ,பட்டால் மட்டுமே
வருவது,இல்லை
பார்பதாலும் தான் ,
பார்த்திர்களா ...நீங்களும்
வினாவுடன் ...கவி

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு