கரும்பாய் ஆன சக்கரை

கரும்பாய் ஆன சக்கரை ,

கால தேவனின்
கை இடுக்கிலே சிக்கி
களிமண் ஆகிய கதையாய்
வாழும் கதி ,,,
விலங்காய் போன மனிதர்கள்

வெட்டும் வாளின் நுனியாய்
வீசும் வெயிலின் தாக்கம்
மண்டையை ஒரு பிடி பிடிக்க
வதங்கி போகிறது பசுவளை
பாதங்கள் ,பாவம்
அரைவயிறு கஞ்சியை
தான் குடும்பம் பருக
வெயிலையையும் மழையை
பருகும் கூட்டம் ,
விசித்திரம் தான் ,

வேகாத உணவருந்தி
வெந்துபோகும் வயிறுகள் ,
சுதந்திர போராட்டம் போல ,
பசியின் தாகம் எவ்வளவு இருந்தாலும்
மிச்சம் பிடிக்கும் கையின் மடிப்புகள் .

செங்கலும் மணலும் சுமந்தே
பாதைகளில் துரும்பேற,
உழைக்கும் வரம் பெற்று பிறந்தனறோ,
அறியவே இயலவில்லை ,
தூங்கும் இடமும் ,அதே தான் ,
கழிக்கும் இடமும் அதே தான் ,
உணருந்தும் இடமும் அதே தான் ,
என்னவொரு கொடுமை
ஆப்பிரிக்க நாடல்ல இதெல்லாம் நடப்பது ,
கட்டும் புது புது கட்டிடங்களுக்கெல்லாம்
புதைந்து போன உண்மைகள் ,

ரதங்கள் எல்லாம் சிமெண்டால் பூசி மொழுக ,
மூச்சு காற்றிலும் மணல் வாசம் ,
வாழும் ஒவ்வோர் வீட்டிலும்
எதோ ஒரு பிணத்தின் ஜீவன் தங்க,
குடிஏறுகிறது பணம் பெற்ற மக்கள் ,
எழிகள் ஏழைகளாகவே இருக்க
பணக்காரன் கையில் மட்டும்
புரளும் பணம் ,
கடன்வாகி விட்டதா பணமும்
அவனிடம் ,வித்தையா அது ,

அடிக்கும் வர்ணங்கள் எல்லாம்
இவர்களின் உதிரம் கலந்தே பூசப்படும் .
உயிர் ஓவியமாய் ,வீடுகள்

தினம் தினம் எமன் இவர்கள் கண்முன்னே
வந்து செல்ல ,தியாக உள்ளங்கள்
பலநூறு அடியிலே ,
பொடிநடையாய்,பல{கை}யிலே ,
மரணத்தின் வாசல் சென்று திரும்புவது
போல ஒரு வாழ்க்கை ,

கட்டிடங்கள் என்பது வெறும் பேருக்கு தான்
உழைப்பின் சின்னங்கள் தான் அது ,
வேர்வையிலே கட்டிமுடிக்க படும்
மணி மண்டபங்கள் ,
ஒய்யாரமாய் வந்து படுக்கும்
யார்க்கும் தெரியாது ,
இதில் உள்ள ஜீவன் ,

அனுபவித்தால் மட்டுமே தெரியும் ,
வெயிலிலே சாதரணமாக
நடந்து சென்று பாருங்கள் வெளியிலே,
கால்கள் இரண்டும் தலையேறும் ,
செங்கல் மணல் தலையேற
சுமந்து செல்லும் உயிருக்கு
என்ன தருகிறோம் நாம் ,
தினம் தரும் கூலியை தவிர

உயிருக்கு உத்திரவாதம் தராத
கட்டிட தொழிலாளி
நண்பர்களுக்கு ,சொந்தங்களுக்கு
சமர்ப்பணம் ,
கரும்பாய் ஆன சக்கரை என் மனம்
ஒரு பிழைப்பு ,,


இன்னிக்கு வெயில வெளிய போனேன் ,
நடக்க முடியாத நான் பார்த்ததும்
வலித்தது ,,
பார்த்ததில் வலித்தது ,
உண்மையுடன் கவி 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு