கட்டணம் கேட்காத காற்று



சிரிக்கும் வயல்வெளியும்
சீரும் பாம்பும்
சிந்தனை மல்கும் சொல்லும்
பிறக்கும் இடமது ,

எங்கே செல்லுமோ வானம்
அங்கே செல்லும் அவள் அன்பு ,
இறுதிவரை தெரியவில்லை
அவள் உண்ணாவிரதம் இருந்த பொழுதுகள் ,

ஏட்டிலே ஏதும் எழுதவில்லை
எட்டி பிடிக்கவும் முடியவில்லை ,
ஏனோ ஒரு சொல் அடக்கமது ,

கட்டில் சுகம் தடுத்தவள் ,
எனக்கொரு உடகேடு வந்தா
உடகிட்ட விலகாம ,
உன்சூடு தந்து என்சூடு தனிப்பா ,

மழைதண்ணி நெனசுபுட்ட
மழைக்கொரு கேடுகாலம் ,
புடவையும் துண்டாகும் ,
பேச்சும் மருந்தாகும் ,

எத்தனைஉருவம் பெற்றாலும்
உன் பாசம் மாறியது இல்ல
எங்கே நான் போனாலும்
உன் நிழல் விட்டது இல்ல

முன்னூறு நாள் மூச்சடக்கி
படுத்திருந்து ,திரும்பினாலும்
இரும்பினாலும் எனக்கென ஆகுமோனு,
இடுப்புல கையவெச்சு தட்டிகொடுத்து,

இருக்க இடமளித்து
பசிக்க பால் கொடுத்து ,
உடுக்க துணி கொடுத்து ,
பிழைக்க உயிர் கொடுத்த ,
உனக்கென்ன இப்பாவி என் செய்வேன் ,

இருக்கும் உயிரும் உன்னாலே
உடுத்தும் துணியும் உன்னாலே
வாழும் வாழ்க்கையும் உன்னாலே
பெற்ற செல்வமும் உன்னாலே ,

உன்னாலே ஆனா இத்தனை இருக்க
நீயோ முதியோர் இல்லத்திலே கிடக்க ,
எனக்கொன்னு ஆகிவிட்ட
பாத்துகிட நீயுருக்க ,
உனக்கொன்னு ஆகிவிட்ட
வந்து நிக்க நா இல்லையே,

அம்மா ,
நீ காட்டும் அன்பும்
கட்டணம் கேட்காத காற்றாக தான் .,,,

அன்புடன் கவி ,,,,..

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு