நெல்மணியின் மனது

கண்ணீர் வரும் நேரங்களில் தான்
கவலையும் வருகிறது ,
மாற்றி கூறி விட்டேனோ ,

கதிர் அறுக்கும் கைகளில் ,
பூச்சு மருந்துகள் ...
விவசாயத்திற்கு அல்ல ...

நெல்பாத்தி அறுத்த கத்திகள் ,
இன்று பலபேர் கழுத்தை அறுக்கின்றன,
தற்கொலைகள் இல்லை ,

தண்ணீரே கொடுப்பது இல்லை ,
வயலுக்கு மட்டும் ,
சரக்குக்கு அல்ல ....

கோடிருபாய் ஏமாற்றியவன்
சுதந்திரமாய் ,ஆயிரம் வாங்கியவன்
தூக்கின் கயிற்றினிலே ,

மாடுகள் கூட உழைக்கின்றன ,
மனிதர்களை தவிர
அதற்கு தெரிகிறது உணவென்பது ஏதுஎன்று .....

கலப்பைகள் புதைக்கபட்டன
வயலின் அருகினிலே ,
கூடிய சீக்கிரம் நாமும் அருகே ...

ஏர்கலப்பை போட்ட நிலங்கள்
இங்கு பட்டா போடுகின்றன ,
வயல் என்பது இல்லை ,

கிரிக்கெட் ஆட இடமுண்டு
அதற்கு இங்கே வரியில்லை ,
உணவு பொருளை தவிர .,,,

கூடிய சீக்கிரம் இடமிருக்கும் தங்க ,
உடை இருக்கும் உடுத்த ,,
உணவிருக்காது ,,,உண்ண,

யோசியுங்கள் நேசியுங்கள் ,,
விவசாயத்தை ,,,
 நெல்மணியின்மனது ..

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு