கைப்பையின் ஓரம்

கைப்பையின் ஓரம்

விண்மீன்கள் பல வீட்டின் முன்னே
வாடகை கேட்டு,
கன்னியின் இல்லம் எதிரே ,,,

செல்லும் காற்று கூட நின்றே செல்கிறது
ஒரு கணம் ,எட்டியாவது
பார்ப்பாயா என்று ,

கொட்டும் மழையும் குடை பிடிக்கிறது
நின்ற வேளையில்
வெளியிலே தெரிவாய என்று

விழிகோளம் தேய்ந்து
புதுக்கோளம் அணிந்துள்ளேன்
அவள் கோலம் போடுவதை பார்த்திட

இரு உதடு இணைந்து
ஒரிதழ் ஆகிறது
பார்வை வீசும் வேகத்திலே
வெட்ட படுகிறது நெஞ்சமும் ,
இடுக்கிலே துணுக்காய் நீ
ஓட்டுவேன் மேலும் வசிக்க
ஓரங்கள் யாவும் இருப்பிடம் ஆக,
நீ நிற்கும் ஜன்னலும்
பூங்காவாக மாற ,
மொய்க்கும் தேனியாய் நான் ,

தெருவிலே அத்தனை வெளிச்சம்
நடந்திடும் நிலா நீ
பகலிலே ,வெளியிலே

கண்ணீர் பூக்களுடன் பல
நேரம் நீந்துகிறேன் ,
கவனிப்பாயா என்று ,

சற்றே உன் விழி
என் உடல் திரும்ப ,
மேல்சென்று திரும்பும் இதயம்

துடிப்பின் வேகம் கூடும் தருணம்
உணர்வேன் ,என்னருகே நீ

குளிரின் மத்தியிலே
என்னவொரு வெப்பம்
உந்தன் மூச்சு
எரிக்கிறது என்னை ,

துளசி மரத்தினை நீ சுற்ற
என் பார்வை உன்னை சுற்ற ,
என் துளசியாய் நீ,

எதோ ஆகிறது ,
என்னமோ ஆகிறது
மனம் மட்டும் என்னிடம் இல்லை ,
உன் கைப்பையின்
ஓரமாய் நெஞ்சம் ,,,,

விளக்கேற்றும் நேரம் எல்லாம்
என் நரக பொழுதுகள்
,,ஒரு நிலா மேலிருக்க ,
மற்றொன்று உள்ளே ...

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு