கண்ணகி

கண்ணகி
காற்சிலம்பு பிடிபட்டு
கணவனை கொன்றாய் என
எரித்தாயா என்ன மதுரையை ?

பிடித்துபோய் தன்னை
சுமக்கும் பெண்ணை
வேசி எனுமோ சமுதாயம் ,

காதலெனும் சொல்
விடுமுறை பெற்று ஓடுமோ
சமுதாயம் முன்னரே  ,

காதலை காதலாக
பாராமல் காமமாக
பார்த்திடும் கண்களின்
முன்னே ,காதலும் பாவம்

கடந்தே போகும் நேரங்கள்
காதலனுடன்,வயிற்றிலே
குழந்தையுடன் ,கழுத்திலே
தாலியை மட்டும்

தொலைத்துவிட்டது ,
ஜனநாயக வளர்ச்சி ,,,...

ஓடும் பேருந்துலே
கற்பழிப்பு ,குற்றம்
செய்தவன் சிறுவன்
என விடுவிப்பு ,,
சட்டம் ,,,

பெண்ணின் மரணத்திற்கு
பின்னரும் தலையிடும்
மனித உரிமைகள் ,,

குற்றம் செய்தவனும்,
மனிதன் என
கரிசனைப் பாடும் மக்கள்
மரணதண்டனை
கூடதெனும் அமைப்பும்
நாட்டிற்கே உரித்தான
அன்பு ,,,கேவலம்

பெண்ணின் கைகளிலே
கண்ணகியின் ஒளிகொடுக்க
எரிக்கபடுமோ உறுப்புகள் ,,,,,

கண்ணகி தேவை ,
கூடிடும் சமுத்திர
நாட்டிற்கு,,,
கண்டுபிடித்து தாருங்கள்
என் தமைக்கைகளுக்காக
தோழிகளுக்காக ,
உறவுகளுக்காக ..

கவி ,,,  

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

மல்லிகை மொட்டு

கனவு கள்வன்