அடுப்பின் வெளிச்சம்

அடுப்பின் வெளிச்சம்

மஞ்சள் பூசிய
மனதார விழிகளிலே
ஏன் இந்த மயக்கம் ,,/
கண்ணிபெண்ணின் மனதாய்
காதல் நுழைய,
கருபிடிக்கும் வெள்ளை சுவரும் ,

வெறுத்து ஓடும் நாயை போல்
விட்டு துரத்தும் நினைவு
ஒற்றை பார்வையிலே
என்னவொரு கண்ணிவெடி ,,
கண்களிலே ,,,

துருபிடித்த இரும்பாய் என்தேகம்
பளிச்சிடும் பாத்திரமாய் நீ
ஓட்டினால் ஓட்டும் ,
என்னுடன் நீ ..

மாவிலை கட்டிய வீட்டின் முன்னே
மறைந்து பார்க்கும் ,கண்கள்
மஞ்சள் அறைத்து உன்னை
குளிப்பாட்ட நினைந்து போனது
எந்தன் நெஞ்சம் ,
இதுவரை சிறுமி நீ ,
பெரியவளாகி விட்டாய்
ஒற்றை வ[லி]ழியிலே
எனக்கும் வராதா என நான்
ஏங்கிய பொழுதுகளே காட்டிகொடுக்கும்
உன்மேல் வைத்த அன்பினை

பசுமர காற்றைபோலே
பசும்பால் தேககாரி
அடித்துவிட்டாய் நெஞ்சினை ,
உடைத்துவிட்டாய் உயிரினை,

எல்லாவற்றிற்கும் முடிவுண்டு
என்றால் ,காதலே
உனக்கு இல்லை ,,

இமைகள் எறிந்தாலும்
உன்னை காண்பேன் என்கிறது
விழிகள் ,காது அடைத்தாலும்
கேட்பேன் சொல்கிறது
செவிகள் ,
ஐம்புலனும் உன் கட்டுப்பாட்டிலே

அழாககிறது நெஞ்சம் ,
அடுப்பின் வெளிச்சம் போல ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு