ஒளியின் மறைவிலே இருட்டு

ஒளியின் மறைவிலே இருட்டு

               
                 கலங்கரை விளக்கம் இருக்கும்
தொலைவு கப்பலுக்கு தெரிவதில்லை ,
கப்பல் இருக்கும் தொலைவும்
கலங்கரைக்கு புரிவதே இல்லை ,
இணையும் தருணம் தான்
வழிகாட்டுகிறது வெளிச்சம் ...

காற்றோடு மிதக்கும் கரிசல்மண்
போல்,கனவுகள் கரைகிறது
களிமண் பானையிலே ,

துணிஎன்பதுஉடுக்கதான் என்பது மருவி
உடுத்திடதான் துணி என மாறியது ,
காலம் போன போக்கிலே ,
கொண்டு சென்றது இவர்கள் ஆசையினை,

கதிர் அறுத்தாலும் ,கண்கள் மூடினாலும்
நினைக்கும் நினைப்பெல்லாம்
மூன்றாம் உசுரும் நாலாம் உசுரும் தான் ,

எனக்கென கிடைக்குமோ என்று
பாராமல் உணவருந்தும் பொழுதெல்லாம்
பசியுடனே முடிந்த நாட்கள்
நட்சத்திர வடிவில் வானிலே ,

சிறைவாசம் பட்டு பத்துமாசம்
வயிற்றிலே இருக்கும் வரை
புரியவில்லை ,என் கஷ்டம்
உன்னை தாக்குமென்று ,

தந்தையின் தோல் உன்னை
தாக்கு பிடிக்கும் வரை தான் ,
தாயின் மடிவாசம் கிடைக்கும் ,

தலைகோதும் அன்பிற்கும்
உண்டோ அடைக்கும் தாழ்
என்கிறது என் ஆழ்மனம் ,
இருபதாண்டு வாழ்கையை
பிச்சையாக போட்டு
புண்ணியம் தேடவில்லை,
மாறாக புண்ணியம் தந்தனர் ,

மறு தாயாக வருபவளை
என் கைகளில் சேர்த்துவிட்டு,
மறுகணம் சிந்திய கண்ணீர்
ஏன் என இதுவரை புரியாத நிலை ,

பார்த்து பார்த்து செய்த என் வாழ்வை
பார்த்து பார்த்து ,உம் வாழ்வையே
துளைத்துவிட்ட இரு உயர் நெஞ்சங்கள்

கனவுக்குள்ளே வாழ்க்கை அமைக்காமல்
என் கனவையே வாழ்க்கையாக
தந்த வாழும் தெய்வங்கள் ,

என் வாழ்வை நினைக்கும் கணம் மனதிலே
தோன்றும் உங்களின் உன்னத நிகழ்வு

நன் பேனா பிடிக்கும் நொடியினில் தான்
பார்த்தேன் என் தந்தையின் கையிலே காப்பு,
நான் புதுத்துணி உடுத்திய
பிறகே தெரிந்தேன் ,என் தாயின்
கிழிந்த சேலையினை ..

வாயருகே சோறுட்டும் தருணம்
உன் வியர்வை தென்பட்டது
உணவுக் கலவையிலே ,
தெரிந்துவிட கூடாதென,
மறைக்கும் சேலை சொல்லியது
உன் உழைப்பினை ,,.

விவசாய நிலம் அடகு,சென்றதால்
என் கால்கள் கல்லூரி சென்றன ,

மூன்றாவதாய் வந்த உயிருக்கென்னமா
தெரியும் நம் உறவின் பாசம் ,
வாழ்ந்தவாழ்வே என்ன பார்த்து
இகழ்கிறது ,

ஒரு ஓரமாய் நெஞ்சிலே
காயத்துடன் ,என் வாழ்வு நகர ,
விடைகேட்கும் தருணங்கள்
வரும்போதெல்லாம் போர் போர் ,
வாயிருந்தும் ஊமையாகின்றன ,நேரங்கள்

கண்மூடி நடந்ததெல்லாம்
எழுதும் குருட்டு விழிகள்
முதியோர் இல்லத்திற்கு ,
படித்தும் ,என் மகன் கடிதமென
புகழும் தாய் தந்தை பாசம் ,
ஒளியின் இருட்டிலே வெளிச்சமாய் ,
ஒரு வாழ்வு எனக்கு ,,


கற்பனை கவிதை ,
கண்ட காட்சியின் வேகம் எழுதியது ,,,
கவியரசன் ...

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு