வண்ணமீன் மிதக்கும் வானம்

வண்ணமீன் மிதக்கும் வானம்

இருகோட்டு புள்ளிகளுக்கு
இடையே ஒரு புது புள்ளி ,
கண்டதும் புரியவில்லை
நேரம் பிடித்தது ,
இருவிழி அழகே ,காண கிடைத்தது

சொல்லேதும் தீண்டாமல் கற்பனை
பெறுகியது,உச்ச மூச்சின்
வாசத்திலே ,கவிதையை துப்பியது ,

சிறகுகள் ஏதும் கிடைக்காமல்
தரையில் கால்கள் நிற்கவில்லை ,
உன்னை பார்த்தது தான் ,
என விளங்கியது,விழுந்த பின்னே

இருதயம் இருகுதிரை வேகம் பிடிக்க ,
ஓட்டுபவள் நீயா என
கேள்வி எழுப்புகிறது முகுளம் ,

சிறைவாசம் பெற்ற கைதிபோல்
சிக்கிகொள்கிறேன்,ஒருவழி பாதையன்றோ ,
கனவேதும் காணவில்லை ,
கண்மணியே என் கண்முன்னே

திகைத்து போகிறேன் ,
உன் செந்தழழ் உதட்டிடையே ,
ஒருவார்த்தையாவது
வெளியிலே வருமா,
என கோணத்திலே என் மனம் ,

வானவில் உனக்கு தந்த பரிசாக
உன் சேலை என்னை கண்ணடிக்க,
உதிரம் கொள்கிறது ,நாடிகளும்

வர்ணனை பேசசிகளுக்குகாக,
வரைந்த ஓவியமோ உன் முகம் ,
இடம்பிடித்த பொட்டுக்கும் என்னவொரு வெறி .

நடந்துவந்த பாதையை
சற்றே திரும்பிப்பார் ,
பூக்களின் வடிவத்தை ,
துளைத்து எழுகிறது ,
பாதம் பட்ட இடமெல்லாம் ,

உன்னை படைத்தவனும்
கர்ணனே ,என்னவொரு வள்ளல்தனம்,
ஐயோ உதடுகளும் கூசுகிறதே ,

பெயரைக்கூட அப்படிதான் வைத்தானோ ,
கோடைகால குளிர்பானமாய்
இருக்கும்,குரலை எப்படி பெற்றாய் ,

காதலெனும் ஒற்றைசொல்லை
மட்டும் உன்னிடம் எதிர்பார்த்தால் ,
மன்மதன் கூட காண்டாகி விடுவான் ,

என் வானிலே வண்ணமீன்களை போல்
உன் வெளிர்பிஞ்சு முகம் ,.....

கற்பனையே  திகைக்கும்
அழகிற்கு என் உதாரணம் ,
வந்து விழும் வார்த்தைகள் அப்படி ...
கவியரசன். 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு