கோடை மழை

கோடை மழை

வஞ்சனை கோரும் வானம்
வருத்து எடுக்கிறது கதிரவன்
கண்களின் ஈரம் கூட
காய்ந்து விடும் தருணம்
தோலின் மேல் ஒரு அருவி
கணப்பொழுது கண்ணிமைத்தது
கண்ணெதிரே மழை ,,

நின்றும் பெய்யவில்லை,
நின்றும் போகவில்லை
காற்றில்லாமல் ஆடிய கிளைகள்,
நீரில்லாமல் நினைந்த இலைகள்
கண்ணின் காட்சியோ
கற்பனை காட்சியோ
விளங்கும் தருணத்தில்
பிரிந்தது யாவும் ....

வெட்டியாக திரிந்த காற்றோ
அடிக்க ஆரம்பித்தது ,
வேலை செல்லும் வெயிலோ
வாட்ட தொடங்கியது,
என்ன நடந்தது அக்கணம்

புறமுதுகு இட்டு ஓடிய
இருட்டெல்லாம்,ஒரே சேர
எந்தன் முன்னே ,,

கோடை மழையாய் வந்தவள் எங்கே ,,,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு