பசி


வியர்வையில் துணி நனைத்து
வயிற்றோடு ஒத்திஉலர்த்திய
காலத்தில் கனவென்பது
ஒருவேளை உணவென்பேன் !

விழும் பருக்கைகள் 
எனக்காக விழக்கூடாதா என்று 
வேடிக்கைபார்த்த வித்தியாச மனிதர்களில் 
அன்று நானும் ஒருவன் 

இரைக்காமல் சாப்பிடு என்று 
அம்மா சொல்வதில் 
என் பசி அடங்கிவிடும் , 
எதுவும் மிச்சமில்லை எனக்காக !

எச்சில் இலை என்று எட்டிஎரிவதை 
எச்சிலூற உண்ணும் 
ஏகோபித்திய மாக்களில் ஒருவன் 

உடுத்திய துணியில் மிடுக்கைபார்த்து 
படுத்த இடத்தில் வீட்டை பார்த்து , 
சாப்பிட்டாயா கேள்வியாய் கேட்டு 
சந்தித்த மனிதர்கள் கைகுலுக்கி 
சற்றே பார்த்தால் !ஆன காலம் 
வீட்டை பிரிந்து விலாசம் தொலைந்து 
விண்ணே அடைக்கலமாய் 
வீணே அலையும் 
எவருக்கும் பொருந்தும் 
எனக்கும் சமர்ப்பணம் !

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு