வண்ணத்து பூச்சி

வண்ணத்து பூச்சி
உருமிடும் வாகன  புகையிலே
வண்ணத்து பூச்சியின்
உடைமை அழுக்காக்க  படுவதில்லை ,,

எந்த ஓவியன் தீட்டிய
உயிரோவியமோ ,,
பறந்து செள்கிறது மெல்ல
காற்றிலே ,

தன்னை தானே அடைத்து
வாழும் குணம் உனக்குமா

நிறம் நிறமாய் இருக்கின்றாய் ,
இருந்தாலும் ஒரே பெயர் ,,
யார் வைத்தது இப்பெயர் ,

ஒரு கண நேரம் போதும்
உன்னை கண்டு நான்
வியக்க ,,,விசித்திரம் ,,

சரித்திரம் பேசிடும்
வாக்குகள் இடையே
இடையிடையே ,,,பேச்சினை
கலைக்கிறது உன் அழகு ,,

பெண்ணுக்கு பதில்
உன்னை கட்டினானோ அக்கடவுள்
இக்கணம் என் முன்னே ,,,
நிஜமாய் உணர்கிறேன் ,,

எளிதில் கடக்கும்
காற்றிற்கும் அழகை
சேர்க்கிறது உன் சிறகு ,,

எத்தனை கற்பனை ,,
எழில் கொஞ்சும்
நிறமிகள் குடிகொள்ளும்
தோகை வடிவினிலே ,

இருப்பிடம் ஏதும் இல்லாமல்
திரியும் உனக்கோ
இவ்வளவு அழகு ,,
கற்பு தொல்லை இலையோ ,,,

விரல் நுனி வானவில்
பிடிக்க இயலாது
வண்ணங்களின் வாசனை
விருப்பத்தின் மொத்த உருவம் ,,
கண்டால் உயரும் புருவம் ,,


காதல் துளிர்க்கும்
நொடியில் தோன்றும்
அற்புத உவமை

உருவகம் செய்ய
உருவாக்க பட்ட ,,உன்னதம் ,,

எத்தனை ,மலரின் தேனை
குடித்தையோ ,,சொல்ல வரவில்லை ,,

உணர்த்தும் உன்
உடல் அழகை கண்டாலே ,,
உருகிடும் மனதின் வாசல்

கோடி துன்பம் மனதில் வந்தாலும்
ஒற்றை நொடியில் போக்கிடும்
உனக்கென தெரிகிறது ,
இத்தனை உன் பெருமையினை ,,

வண்ணத்து பூச்சியே ,,
ரசிகனாகிறேன் ,,
உன் அழகுக்கு ,,

கவி 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

மஞ்சள் நிலவு