கல்யாண சொந்தம்

கல்யாண சொந்தம்

வழியிலே விழி கூட ,
வாழை மரங்களின் அணிவகுப்பு
தொடர ,,காதுக்கு இதமான
சுடுநீர் போலே ,
மேளதாளம் கொட்டிட ,
நட்சத்திரங்களின் எண்ணிக்கையை
எட்டும் அளவு சீர்வரிசை
தனது சிறப்பினை காட்ட ,
வைக்க இடம் அற்று ,
மணமகன் உறவினர் மடியிலே
அமர்ந்தது ,,ஒருவழியே
அத்தட்டுகள் ,

வெள்ளை வெட்டி அணிந்த
மணமகன் பார்வையோ
மணமகள் இடம் தேட ,
கண்களின் சுமைக்கு எதுவாக ,
கால்களும் அதன் இடத்தினை
மாற்றிட ,மாற்றப்பட்டது
தட்டுகள் ,ஏற்றப்பட்டது விளக்கு
நிச்சயம் தார்த்தம்
,,அனால் அது மட்டும் இல்லை
மணமகன் கண்களின் ஒரே
உருவம்  பச்சைகுத்தியது ,

ஏற்றப்பட்ட விளக்கிலே எரியும்
தீச்சுடர் போலே ,மனமகள் வந்து நிற்க ,
ஆரம்பனாது கல்யாணம் ,
மனதுகளுக்கு,
தாலி ஏதும் இன்றியே பார்வையில்
குடும்பம் நடத்த தொடங்கியது
அந்த ஜோடி ,.

வரவேற்பறையில் இடம்பெற்ற
சந்தனம் மிகுதியில்
வருவோரை வரவேற்க ,
சொந்த பந்தங்கள்
உணவாரும் இடம் சேர ,
இனித்து உதயாமனது
 க[ல்]லியாணம் ,,,

பெரியோர் ஆசியுடன் ,
குதிரை துணையுடன் ,
வந்து இறங்கியது
மனபம் முன்னே தலைவன் கால்கள் ,
இறங்கிய நொடி ,,
மூச்சிலே அவளை பிடிப்பது போல்
தேடும் அவர் உயிர் மொத்தம் ,

உடலை மட்டும் வெளியே
சடங்கிலே இட்டு ,
மனதோ ஓடியது
தலைவியின் முகம் பார்க்க ,

மல்லிகை மனம் மறக்க ,
கூந்தலிலே புடை சூழ ,
நடந்து வரும் தேவதையாக ,
நட்பு போர் படைகளுடன்
அசைந்து நடந்து வந்தால்
மகா ராணி .

செங்கோல் வாளுடன்
மணமகன் தோழன் இடம்பெற ,
கைகளுக்கும் விருந்தானது
தங்க மோதிரம் ,
சிரிப்பு சத்தத்திலே
கரைந்தோடிய விழிகள்
தலைவியின் மேனியில் பட்டு சிதற ,
இரு உறவுகள் ஒருசேர
ஒய்யார நடைபோட ,
தேசத்தின் ஒற்றுமொத்த
அழகும் ஒற்றை நொடிகளிலே

இனிப்பாக மாறியது
கசப்பான உணவும் ,
கசப்பாக மாறியது
தலைவி பிரிவும் ,

உடை மாற்ற தனியே சென்ற கணம்
கூட தாளாத மனம்
தாழிட்டு அழுத வலி
எங்கேனும் உண்டோ ,
சிதறல் மிகு கூடத்திலே
தனித்து நிக்கும்
ஒற்றை உயிர் ,...
நலங்குக்கு ஆயுத்தமானது
அனுபவ உறவுகள் ,
மஞ்சளும் சந்தனமும்
ஒன்றாய் கலந்திட ,
காற்றும் இசைபாடும்
கன்னத்திலே ,கைகளிலே
விரல்களிலே ,
நெற்றியில் இட்ட பொட்டுகள் ,
கூறியது ,,இதுவே
நாங்கள் வைக்கும்
கடைசி பொட்டு,
இனி அது தலைவன் விரல்கலிலே,

காண்போம் மிச்சத்தை ,,,,
நாளையும் ,,காத்திருங்கள்
நொடிகனம் நொன்டட்டும்,,,
கவியரசன்    

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு