அவள் காதல் நான்💖💁💃

அவள் காதல் நான்

நேரங்களில் அழகு என்பது ஏது
அன்று தான் கண்டேன் ,
ஒவ்வொரு நொடியும்
என் பார்வையில் அழகானதை ,
சட்டென வானம் மொத்தம்
தரையிறங்கி மேக போர்வை வீசி
விளையாடுவது போல் ஒரு பிரம்மை

தென்றல் அன்று
எத்துனை வாசத்தினை சுமந்து
என்மேல் மோதியதோ
பூஜை அறையிலே நான் உணர்ந்த வாசம்
சாலை அருகிலே இன்று

மரம் தன்
இயற்கை காதலியின் கைவிரல் பிடித்து
மெல்ல அசைந்து கொண்டிருக்கும் வேளையில்
குறுகுறுவென பார்க்கும் குருவிகள்
தடதடவென பேசும் காகங்கள்
மஞ்சள் மேனியில் பொட்டுவைத்தாற்போல்
சிறு சிறு புறாக்கள்
கொஞ்சி பேசி செல்லும் கிளிகள்
எம்மிருவர் போலவே
இணைபிரியாத காதல் பறவைகள்
என எனக்கு நிழல் கொடுத்த
அம்மரம் இத்தனை வேஷம் அணிந்து
என் பார்வைக்கு விருந்தளிக்க

அதோ நடந்துகொண்டே
பெய்துவரும் அடைமழை
தலை குனிந்த படியே
என்னை நோக்கி வரும்
பாசப்புயல் ,
என்னவென்று நான் கூற
வார்த்தைகள் தொண்டைக்குழியை
நசுக்கி நசுக்கி நான் பேசும் நான்கு
வார்த்தைகள் கூட
உன் பெயராக .

வேற்றுகிரக வாசி போல
துணைக்கு ஆளில்லாத
அகதியை போலவே
என் தேகத்தின் வியர்வை குளியல்
என்னையே என்னிடம் தனிமைபடுத்த

நான்கடி தூரத்தில்
அடைமழை கண்டும்
பயமென்னும் அரக்கன் என்னை
உலுக்கியதில்
உடலில் உள்ள நீர்சத்து மொத்தம்
வியர்வையாக

அவள் நிச்சயம் பார்ப்பாள்
என்றெனக்கு தெரியும்
ஆனால் பார்வையில் என்னை   .
கொன்றுவிடுவாள் என்பது
தலை நிமிர்ந்த அடுத்தகணம்
நான் அறிந்தேன் ,

ஐயோ அர்ஜுனன் தொடுத்த
அன்பு தப்பாது என்பது
நினைவில் இருக்கும்போல
அவள் வில் பார்வையில்
புறப்பட்ட அ[ம்]ன்பு மட்டும்
என் மார்பின் சதை இடுக்கே
சரிந்தே விட்டேன் நின்றபடியே

அந்த ஒரு நொடிபொழுதில் ,
வானம் மிதந்துகொண்டே
என்மீது மேகத்தை கில்லி எரிந்தது
பறவைகள் ரோசா இதழ்களை மொத்தமாய்
எடுத்துவந்து என்மீது வீசியது
பட்டம்பூச்சிகள் ஆயிரம் சேர்ந்து
என்னை சுமந்துசென்று திரும்ப விட்டன
மழை இல்லாமல் ஒரு குளியல்
வெயில் இல்லாமல் ஒரு நனையல்
சத்தம் இல்லாத படுகொலை
திட்டமிடாத மனது திருட்டு
வெட்கம் வராத ஒருவகை நாணம்
சுட்டாலும் வராத ஓர் பார்வை

கால்கள் இல்லாமல் நான் தவித்தேன்
பேச்சு வராத குழந்தையானேன்

மூச்சு வராத பிணம் ஆனேன் ,
காற்றும் சீண்டாத வெற்றிடமானேன்

ஒரே ஒரு சீண்டல் அவள் என்னை
தீண்டினால்
நான் மரித்துபோனேனோ
என்கிற அச்சத்தில்😍
நல்லவேளை உயிர்மட்டும்
அவள் கூட்டில் அப்படியே

அவள் வாய் திறந்த
அந்நேரம் என் உள்ளுர ஓடும்
உதிரம் மொத்தம்
அக்கினி குழம்பாய் கொதித்துழும்ப ,

மாரடைப்பு வந்துவிடுமோ
என அஞ்சினேன்
எஞ்சின் சத்தம் என் இதயத்தில்

சொல்லிவிட்டாள்
ஒரு துளி கடல்
என்னிடம் சொல்லிவிட்டாள்,
அவள் உயிரின் மறுபாதி
நானேன சொல்லிவிட்டாள்,
அவள் நெற்றி பொட்டும்
நானென சொல்லிவிட்டாள்
அவள் இருபது வயது தவம்
எனக்கென சொல்லிவிட்டாள்

மூன்றே மூன்று
வார்த்தைகளில் நாணத்தை முடிச்சிட்டு
என் கைவிரலுக்கு முத்தபசை இட்டு
மெல்லிய புன்னகையில்
எனை வீழ்த்தி
என் காதுமடலின் ஓரம்
பிடித்து சொல்லிவிட்டாள்
அவள் காதல் நான் என ,

மரணம் நிச்சயம்
பெரிதில்லை என்பதை
ஓரிரு வார்த்தைகளில்
சொல்லிவிட்டாள் அழுத்தமாக
முத்தத்தின் குவியல்களை
மேடெழுப்பி அவள்
எனக்கான அரண்மனை கட்டிவிட்டாள்
அன்றே அவள் மனதருகே
நான் சென்று வசிக்கிறேன்
அவள் என் காதல் ,

காதலுடன் கவியரசன்.

,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு