மழலைமொழி

மழலைமொழி

பேசிடத்தான் வார்த்தைகள் வரவில்லை
அமைதி பேசுதடா
ஆயிரம் வார்த்தைகள் வழக்கில்
இருந்தாலும் நீசொல்லும் அம்மா ஆகுமா
கண்ணோர கண்ணீருடன் நீ என்னை
பார்க்கையிலே பாவங்களும்
ஒட்டிகொல்லுதடா என் தங்கமே ..

கதறி அழும் போதிலே காதிலே
கண்ணிவெடிகள் வெடிக்குதடா
உனக்கு உணவு ஊட்டுவதை
விட உலகிலே கடினமென்பது எது
இடுப்பிலே உன்னை சமாளிக்க
போர்களங்கள் வேணுமடா

இரவிலே நிலவும் கூட உறங்கலாம்
உன் சத்தங்கள் ஓய்வதே இல்லை
பௌர்ணமிகள் கூட வராமல் ஆகலாம்
உன் சிரிப்புகள் நிறையும் தருணத்தில்

உலகம் கூட குளித்து விடும்
ஆனால் உன்னை குளிப்பாட்டுவது ஐயோ ,,
கண்கள் கூட மூடி விடலாம்
தொட்டில் ஆட்டும் சோர்விலே

என்னவோ பேசுகிறாய்
யாரிடமும் பேசுகிறாய்
என்னாதான் பேசுகிறாய்
எதற்கு பேசுகிறாய்
கடவுளுக்கும் நமக்கும் இதுதான் வித்தியாசமோ ,,,

உன் நெற்றியிலே குடிகொள்ளும்
கருமை பொட்டுக்கு எத்தனை  வரம்
கால்களின் கொலுசுகள்
தவம் பெற்று வந்ததோ

தரையிலே தவழும் உமக்கு
இடுப்பிலே தவழும் வெள்ளி அறைஞான்
கயிறும் எதோ பார்த்து சிரிக்கிறது

குத்திவிடுமோ என்ற பயத்திலே
தாலியும் அகல்கிறது பசியாற்றும் பொழுதிலே
அழுத்தி விடுமோ என்கிற பயத்திலே
கைகளும் மெத்தையாகிறது
உன் பாதங்கள் என்ன பஞ்சா
அதற்கும் ஒரு கண்ணுண்டு ,,

நீ பேசுவதை அறியும் வல்லமை
தாயிற்கே கிடைத்து இருக்கிறது போல

மழலை சிரிப்புகள்
மனதை வருடும் என்ற நோக்கிலே
கடவுள் குழந்தையை அனுப்புகிறான்
வளர்ந்துவிடுவான் என மறந்து,

என்னமோ ஏதோ
மழலை மொழியே உலகில் என்றும்
ஒரே மொழியாய் திகல
என்ன நான் சொல்வது,,,
குழந்தை ஆகிறேன் நான் ,,,
உன் இதழ் சிரிப்பிலே ,,

கவியரசன்...,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு