மழை

மழை
மழை தன் கருணையை
மெல்ல வறண்ட மண்ணுக்கு
காட்ட தொடங்கியது

வானை நோக்கி பாவமாய் காணும்
இச்சிறுமியை காணதான் இத்தனை வேகமோ
இல்லை இச்சிறுமியை அள்ளி அணைத்திட
மண்ணை வந்து அடைந்ததோ

பறந்திடும் அனைத்தும் புகழிடம் தேட
ஊர்ந்திடும் அனைத்தும் வெப்பம் தேட
இளம்பருவ ஜோடிகள் காமத்தை தேட
எத்தனை பசி தான் தீர்பாயோ
தன் ஒற்றை துளியிலே

புதை மண்ணிலே புதைந்துள்ள
விதையும் ஏக்கத்துடன் எவன் என்று
பூமியை பிளந்து காண
துளி விரல் பட்டதும் சிலிர்த்து விரிகிறது ,,மொட்டு

மாட்டு வண்டியின் ஈர ஒலியிலே
விலகி செல்கிறது மண்ணின் வாசனை

கண்ணில் நீர் ததும்ப மழை யாரை
எதிர்பார்த்து அழுகிறது
ஒருவேளை என்னைத்தான் எதிர்பார்கிறதோ ,,,

மழை ஆணா பெண்ணா
எதுவென்று தெரியவில்லை ,,
அவளை கண்டதும் வெட்கப்பட்டு
சாரலை தெளித்திட
கன்னி உடல் கள்வனால் நினைக்கப்பட்டது ,,,

மேக கூட்டத்திலே கடும்
போட்டி போலிருக்கிறது
இதனை மேகமும் கோவத்துடன்
ஓரிடம் நோக்கி பேய,
என்னவள் மாடியில் நிற்கிறாள்,,

இவளை கொஞ்சிடதான் இதனை வேகமோ,
கணபோழுதிலே தன் காதலை
அவிழ்த்து விடுகிறது

மழை நீரில் ஏன் உப்பில்லை என்ற
செய்தி இப்போது தான் வந்தது
அவள் வேண்டாம் என்று சொல்லியும்
சுரணை இல்லாமல் தொடர்வதால் ,

மழை ஆண் தான்
அவன் என் நண்பனாகி விட்டான்
அடிக்கடி கண்ணீர் விடுகிறான்
காரணம் இல்லாமலே ,

ஒவ்வொரு முறையும் என்னை
கட்டி அணைக்காமல் சென்றதே இல்லை
எத்தனை நட்பென்றால் காய்ச்சலே
வந்துவிடும் பலமுறை ,,

நண்பா உனக்காக ,,,

கவி .எழுதும் கவிதை ...

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு