அழகு என்பது????

அழகு என்பது????

அணுப்பிளவை மேற்கொள்ளும் அவள் கண்களோ
கார்மேகம் கொடுத்த கூரையோ
கண்களின் ஈர நிழலோ
கதிரவன் கொடுத்த ஒளியோ
கலைஞன் வரைந்த ஓவியமோ ,,
கற்பனை கதையோ
காலைபொழுதின் காற்றோ
மழைபோழுதின் இருட்டோ
...மறைத்து போகுமே
மழழை சிரிப்பிலே ....அழகே அது தானே

இலையுதிர் சோலையோ
இஞ்சியின் சுவையோ
பாலின் நிறமோ
பசுவின் மடியோ
குயிலின் சத்தமோ
கடலின் அமைதியோ
கன்னியின் மேனியோ
கலங்கரை விளக்கமோ
தாயின் அன்பிலே சிறிதானது ,,,அழகே தாய் தானே .

சிரிக்கும் உதடுகளுக்கு ஓய்வளிக்கும் முதுமையோ
செரிக்கும் வயிற்றினை அமைதிகாக்கும் வறுமையோ
கண்னுக்கு நிம்மதி தரும் குருடோ
கத்திநாளும் கேட்காத காதோ
ஒவ்வோர் நிலையிலும்
புரிதலே அழகா கட்சி தருகிறது //

வைரமுத்துவின் வரிகளோ
வாலியின் தத்துவமோ
கண்ணதாசன் அனுபவமோ
தீண்ட தூண்டும் இசையே ஆகிறது அழகு ....

காதுகளின் இடுக்குகளுக்கு மதியிலே
ஒளிந்துகொள்ளும் காதணிகளும்
மூக்கின் மேல் ஒய்யார மிடுக்கில்
அமரும் மூக்குத்தியோ
கழுத்துக்கு கீழே கண்களில் பார்வை
சரியும் வகை அணிகலனோ
என் அழகின் மார்பை அணைக்கும்
உரிமை இல்லா உடையும்
இடுப்பிணை கிள்ளும்
ஒட்டியாணமும்
ஐயோ என கொடுமை
அழகே ஸ்தம்பிக்கிறதே
இக்காதல் அழகிலே ....

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு