கிராம காதல்... தொடர்வு..

தொடர்வுடன்......கிராம காதல்

கல்லிபாலு வெடிக்கையிலே
கன்னிபொண்ணும் சமஞ்சிருச்சு

கட்டம்போட்ட சட்டஎல்லாம்
சுத்தி சுத்தி வருகுகுது
கண்ணிபோன்னு மனசு ஏனோ
கள்வனையே, தேடுது

காதலுடன் இவ பார்க்க
கண்கள் ரெண்டும் சேருது
கள்வனின் நெஞ்சிலே
பச்சையும்தான் ஊருது

காதல்கோட்ட ஏதும் இல்ல
புழுதி பறக்கும் மண்ணுல
மனசு மட்டும் போதுமையா
சோறுதண்ணி சேரல

தலப்பாகயிலே என்
நெஞ்சு முடிஞ்சு கிடக்கு
என் சீலையும் உன் விரலும்பட
வரம் கேட்டு இருக்கு

கண்ணுமையும் உன்ன கேட்டு
உசுர தான வாங்குது
கன்னக்குழி நீ இறங்க
காத்தும்தான  இருக்கு

கூழாங்கல்லு உசன
போல உன்மேனி இருக்கு
சுருட்டு பீடி தாலு போல
என் தோலும் கிடக்கு

ஏணிவெச்சும் எட்டலடி
உன்காதல் அளவு
கடுகளவும் இல்லையடி
பயம்மும் தான எனக்கு

கண்மணி சிந்தாம
காலமுழுதும் காப்பேன்
கூரசீல போதும் என
வந்தவளே உமக்கு
தொட்டும் தொடரும் நாளையும்,,,,,,
கவியரசன் ...ர்

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு