''தேடல்'' ,,

தேடல்

மழைத்துளி காணவில்லை
தவிக்குது பாலைவனம்
குடித்திட நீரும் இல்லை
ஏங்குது சாதிசனம்

கதிரவன் வானில் இல்லை
அழைத்திடும் குளிர்காலம்
விரைத்திடும் குளிரினிலே
கேட்குது வெப்பசுகம்

செத்துப்போன உடம்புக்குள்ள
தேடுது உயிரும் எங்கே
எமனுக்கும் பிடிச்சு போய்
சேத்துகிட்டான் வேலைக்காக

காதலும் தேடும் சிலநேரம்
குறும்புக்கார காமம்
கண் இமைக்கும் வலிக்காமல்
கண்கள் மூடும் தருணத்திலே


இலையும் உதிர்ந்து பூமிக்கு
இரையாக ஊர்வலம் நடத்தாமல்
பல உயிர் மண்ணுக்குள்ளே

நூலாம் தேடுது தன்னை
திருட கூட ஆட்கள்
இல்லை என்ற ஏக்கமும்
பாழாய்ப் போவேனோ  என்ற பயமும்

தேடல் இல்லா வாழ்க்கை
கைகள் இல்லா உடல் போல்தான்

ஒவ்வொரு நடத்தையிலும்
அனுபவம் தன் தேடலை
கண்ணாமூச்சி காட்டுகிறது

கண் புருவம் உயர்த்தி
கைவிரல் மூக்கை தொட
தேடிக்கொண்டே இரு
புதைமணல் தான் கிட்டும்
தளராதே ஒருநாள் அது
புதையாலாக மாறும் ,
எல்லைகளை விரிவு செய்
பூமியின் நண்பர்களுடன் விளையாட

ஏழ்மையின் தேடல் பணமேன்றல்
நிம்மதியை வங்கியில் சேமித்து வை
பிற்காலத்தில் அதிகம் தேவைப்படும்

உன் முதுமையில் ஒய்வு எடு
முயற்சிக்கு ஓய்வை அளிக்காதே
முடங்கி போன தொழிலுக்கு சமம்,

தினம் தினம் உணவை தேடும்
பறவைகளிடம் இருந்து விலகி
இருக்க தேடு உன் திறமைகளை
உண்மையில் வெற்றி பெறலாம்

இப்படிக்கு தேடல்களுடன் ,,,
கவியரசன்.ம


Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

மல்லிகை மொட்டு

கனவு கள்வன்