சந்தர்ப்பம்

சந்தர்ப்பம்

மஞ்சார மழையினிலே
மனதுகளின் வெதுப்பினிலே
கண்மூடி வரும் சுகங்கண்டு
இளம்பறவை சந்தர்ப்பம் தேடுதம்மா ..

காலம் ஓடும் திசையினிலே
காற்று செல்லும் வேகத்திலே
கண்ணுக்கு மறைவாய் பல
திறமைகள் தேடுகின்றன ,,சந்தர்ப்ப சாலையை ...

விழிமேல் மூடும் இமைக்கும்
உடல்மேல் மூடும் தோலுக்கும்
என்ன தெரியும் சந்தர்ப்பம்,,,
தோல் மேல் உள்ள ஆடைக்கும்
விழிபார்க்கும் ஒருவர்க்கும்
மட்டுமே கிடைக்கிறது சந்தர்ப்பம்

சந்தர்பங்களும் சந்தர்ப்பம்
தேடும் நேரமிது,,,
ஓடுங்கள் பிடியுங்கள்
அடையுங்கள்
ஒருமுறை மட்டுமே கிட்டும்
மறவாதீர் ,,,
இதுவும் பொக்கிஷம் போலதான் ..
தவிரவிட்டால் இவர் கிடைக்கமாட்டார் ..

நெற்றியில் இருபுருவம் இணைத்து
என்ன தோன்றுகிறதோ
அதனையே செய் ,,,
வெற்றிபெற வாழ்த்துகள்
நம்பிக்கையுடன் கவி ..///

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு