இன்பக் காட்டினூடே. 👯💏

இன்ப காட்டினூடே

திருப்பங்கள் நிறைந்த சாலையிலே
நான் மட்டும் நேர்வழியில்

புற ஊதா கதிர்களின்
தாக்கம் அதிகம் போலவே ,
கண்ணுக்கு புலப்படாத
காதல் அலைகள் மட்டும்
இருவேறு தொலைவுகளில் ,

மேகங்கள் என்னதான்
வெண்மை என்றாலும்
கருநிறம் சேர்ந்த பின்னரே
மழை என பொழிகிறது
இதில் நான் கருமையோ
மழையோ

வானவில்லுக்கும்
புதுவர்ணம் தந்து
அழகு படுத்தியதடி
உன் சிரிப்பு

நீ லேசாக உன் இதழ்களை
திறந்து மூடுகையில்
தென்றல் கூட
காவல் தான் ,

சொர்க்கம் செல்லும்
இருவழிகளை
அழகாய் கண்டுவிட்டேன்
ஐயோ
அது உன் மூக்கின் வாசலோ

இமைகளுக்கு நான்
என்ன பதில் சொல்லுவேன்
ஒரு நொடி திறக்கையில்
என் உயிர் நீராகிட
கடல் எப்படி
வந்தது அடியே
பாலை வனத்தின் அருகே

வாயருகே நிச்சயம்
இனிப்பை வைத்து
வீண்பேச்சு எதற்கென்று
உன் புலம்பல்
என் காதுபட
கேட்கிறது ,

இருந்தாலும் என் மனமோ ,
தீண்டிவிட தயக்கம் ,

மெதுவாய் ஒரு வலி
சில்லென்று என் இதயத்தின் மேற்பரப்பில்
அதையும் அழகாய்
எப்படி நான் கூற
வார்த்தகைகளில் ,

மெலிந்து விட்டதோ
வானம் என சற்றே
பயந்துவிட்டேன்
அடடே இது என்ன என்று !

கதிரவன் மட்டும்
செந்நிறத்தில் அதும் ,
மத்தியில் .

கொள்ளை அடித்துவிட
அத்தனை பொக்கிசம்
உன்னிடையே
என்ன செய்வது
களவாட தெரியாத
தண்டம் நான் ஆயிற்றே ,

உன் ஆசைகளின்
அகண்ட போர்வையில்
சுருங்கிவிட்ட குழந்தை நான் ,
அள்ளி எடு ,
தாலாட்டு
உன் இதய துடிப்பருகே
தட்டி தட்டி
ஆறுதல் கொடு
தூங்க மட்டும் விடாமல்
என்னை காணும்
உன் கண்களில் தெளிவு நான் அறிவேன்

கொஞ்சி விளையாடு
எழுந்துவிடுவேன்
பெண்ணே
உயிர் என்னைவிட்டு
சென்றாலும்
கொஞ்சமாவது விளையாடு

இதுவரை கண்டதில்லை
நான் ஒருசேர
வானவில் ,வெயில் மழை குளிர்
அனைத்தும்
கண்டதும் காயச்சல் ...
உந்தன் நாணம் அதனாலோ ?

உன் இதழ் வரிகளின்
பள்ளத்தாக்குகளில்
என்னை இட்டு தாழிட்டு
 பூட்டியும் விடு/
விடுதலை மட்டும்
கொடுத்துவிடாதே
மூச்சிரைத்தாலும்
நன்று என்பேன் .

அய்யஹோ
எங்கே கண்டேன்
எதை கூற
உவமை கூற
பொருத்தம் இல்லையேல் ,

அது எனக்கு மட்டும்
சொந்தமாயிற்றே

கண்ணுக்கு புலப்படுவதேல்லாம்
சுவாசித்த எனக்கு
இது சற்று புதிதுதான்

அக்கினி உருண்டைகள்
சற்றே மேலோங்க
என் நரம்புகளின் தாள கீதம்
என் காதில் சங்கீதமாய் ,

என் கண்ணாடியில்
மட்டும் இரண்டெழுத்து
இந்நாளின் இரவில்
மூன்றாய் .

சிலிர்த்த குளிரிடையே
திடீர் வெயில்
பகல் பொழுது
எங்கேன கேட்கிறது
என் நெஞ்சம்

சிறகுகள் கொடுத்து
பறக்க சொல்கிறது
மோகம்
என்னையும் என் நெஞ்சையும்

பறக்க தொடங்கிய
அடுத்த கணங்களில்
மோதல் பலமாக
காணமல் போகிறது
இரு நெஞ்சும்
இன்ப காட்டினூடே ...

உங்கள் கவியரசன்.ம 

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு