பூக்களின் புயல்🌠🌠☁🌸👱

பூக்களின் புயல்

சஹாரா சஞ்சலபட்டதோ
குளிர்ப்ரதேசமாய் என் கண்களில் மட்டும்
தென்படும் இடமெல்லாம்
பனித்துளிகள் ஒன்றின்மீதேறி
ஒன்று விளையாடிகொண்டு
கால்வைத்த இடம்தடம்
பதிய நான் சென்ற இடம் ஏது
மந்திர ஜாலம் ஏதும்
நிகழ்கிறதா
என எனக்குள்ளே ஒரு கேள்வி
யார்கண் பட்டது
மணற்மொத்தம் பனியாக

தொலைவிலே பூக்களின்
புயல்
மெதுவாய் நகர்ந்து
என்னை நோக்கியே

புயல் கொஞ்சம் விலக
உள்ளிருந்து கால்முளைத்த
ஒரு தேவதை
பூக்களும் வீழ்ந்ததோ
இவள் கொண்ட அவ்வழகில்

பூவிற்கும் சற்று
வேறுபட்ட ஒரு உருவம்
அவள் அழகில்
உண்மையில் பின்னே நிற்கும்
அவ்வளவும் ,

மைநிறமும் கடன்வாங்கும்
அவள் கண்ணிடையே
ஊர்ந்துசெல்லும்
விழிமுகத்தில்

எந்த உலகில் வானவில்
ஒருநிறத்தில் நின்றதோ
அவ்வுலகில் இருந்து
கடந்து வந்து
பொருந்திகொண்டதோ
இவள் முகத்தில்

ஒரு குளத்தில் இருவேறு நிறம்
எப்படி சாத்தியபட்டதோ
நான் அறியேன் ,

ஐயோ பரித்துவிட்டனரே
என அஞ்சியே போனேன் ,
பார்த்தால் அது அங்குதான் உள்ளது
என்ன இடத்தில் உள்ளது
சிவப்பு பழங்கள்

மயில்தோகை இங்கே
சுருக்கமின்றி
அதுவல்லது
ஒரு புடவை அவள் உடுப்பில்

கண்களை கயிறு கொண்டுதான்
கட்டிவிடவேண்டுமோ
ஐயோ முகம் போதும்
அங்கு செல்வோம்

நட்சத்திரம் ஒன்று மட்டும்
இருப்பதை இன்றுதான் கண்டேன்
ஆமாம் வானம் ஏன்
வளைந்து முக்கோணமாய்

மலைதான் இது
இருந்தாலும் உயரமில்லை
ஒரு இடத்தில் மட்டும்
மெதுவாய் குழிகிறது
எரிமழை வாசலோ
அல்லது உள் எரிந்திடும்
என் மழை வாசலோ

கண்டங்கள் பல சென்றேன்
உருவங்கள் பல கண்டேன்
எண்ணிலடங்காதவை அவை ,
அவற்றிலே இதுமட்டும் தனித்து ,

நிச்சயம் சுரங்கம் சென்றிட
நான் கடினபடுவேனோ
அந்த இடத்திற்கு நான் செல்ல
சங்கினை முன்னேற வேண்டும்
நியதி கூறிடும் ,

பின்பு தான்
அங்கே மெலிதான
உலகமொன்று
காட்சிக்கு தடைபட்டு
இருப்பதை யான் காணலாம் ,

தெரிவதை கூறிடவே
பகல் மொத்தம் போயிற்று
மற்றதை எதை நான் கூற
எவ்விருள் காட்சிதரும்

ஐயோ கதிரவன்
கவிழ்ந்து விட்டதே என பயந்தேன்

அவள்தான் மெலிதாய்
புன்னகைத்து இருகின்றாள் ,
எனக்கெப்படி தெரிந்தது
கண்கள் தான் கூசியதே

வெட்கம் எனும்
மழையினை நான் கண்டேன்
அவள் என்மீது மட்டும்
பொழிந்துவிட்டு
பூக்களின் புயலில்
மீதேறி புறப்பட்டாள்
தடுக்க முயல்கிறது கரங்கள்
என்ன செய்வது
கட்டில் மீதிருந்து
அவளை பிடிப்பதென
நான் விழுந்தேன்
கனவென பல்லை காட்டியது
என் நினைவு ,,...

என்றும் காதல்
நினைவுகளுடன்
கவியரசன் ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

மல்லிகை மொட்டு

கனவு கள்வன்