உன் சிரிப்பு

உன் சிரிப்பு

இடிகள் ஏதும்
இடித்திடவில்லை
மின்னலும் வந்ததாய்
தெரிந்திடவில்லை
சப்தம் கேட்டு
அடங்கி முடிகிறது
வானவில் காட்சி .

கணநேரம் கிட்டுமோ
காண நேரம்தான் கிட்டுமோ
மறுநொடியில்
களைந்து விடுகிறது
மேகம் வரைந்த ஓவியம்

என்ன வகை
தின்பண்டமோ
தெரியவில்லை
மறுநொடியில்
காலியாகிறது
வந்தவுடன் மனம் சென்றவுடன்
காற்றடிக்கும்
திசையெல்லாம் வர்ணம் ஆகுமோ
இல்லை .உன்னை
கடந்ததால் இருந்திருக்கும்

வசந்தங்கள் வரவேற்கும்
வாரங்கள் காத்து நிற்கும்

தெருமொத்தம்
உன்னை காண சேர்ந்து நிற்கும்
அழகே
உன் அழகின் தரிசனம் காணிடவோ.

உன் உதட்டின் வரிகளை
நீ விரித்து
பற்கள் வானத்தை
பறவைகள் பார்க்க
இடையே வந்து செல்லும்
காற்றாய்
உன் நாவு
எழுதிவைத்து செல்கிறது
ஒற்றை நொடிகளில்
ஆயிரம் பக்கங்களை
ஒற்றை சிரிப்பினால் .

என்ன ஒரு கவிதை அன்றோ .

குளிர்காலம் வெயில்காலம்
மொத்தம் உன் முகமோ
சிரித்தால் குளிர்
முறைத்தால் வெயில் ,

நடுவில் வரும்
மழை மட்டும்
உன் காதல் ,

மின்னலின் புகைப்படம்
உன் சிரிப்பு

கவியரசன் .

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

மல்லிகை மொட்டு

கனவு கள்வன்