காதலின் நுனி.

தளிர் வீசும் ஒரு காலம்
கனவோடு கவிதையும் பேசும்
தென்றல் என் மூச்சை கடத்தி
அவள் ஆடையில் ஒட்டும் மாயம்
அரங்கேறும் மந்தை விழிகளிலே

இளையவள் கடந்திடும்
அக்கணத்திலே
என் உயிர் நாடி மொத்தம்
ஸ்தம்பித்து ஒரு பொட்டில் தெறிக்கும்
என் நெற்றியடி ,

நேர்த்தியாய் செய்த அப்புருவம்
என் விழி கோணத்தில் ஏறிக்கொண்டு
வானவில்லாய் மாறி வளைகிறது

பூகம்பம் வீசாமல்
பூ கம்பம் என்னெதிரே
வீசி செல்கையில் தோற்றே போகுதடி,
அப்பூகம்பம் ,

நெடுங்காலம் கழித்து
ஒருநாள் மலரும்
மொட்டென உன்சிரிப்பு
நிற்கையில் மற்றவை எதற்கு .

கவிதைகள் பேசும் முன்னர்
காற்றும் பேசுதடி
விழிகளால் உன்கோலம் என் நெஞ்சில்
காற்றடித்தும் அழியாமல்
உன் பேரை கேட்குதடி ,

வாழ வந்தவள் நீதான்
என்றும் என் மனதுக்கு
சொல்லிவிட்டாயோ
பழையவை கழிந்து
புதியன புகுகிறது
நிகழ்காலம் .உந்தன்

ஏமாற்றம் அதிகரிக்கும்
என நான் அறிவதில்லை
உன் காதல் பாடத்தில்
தெரிந்து கொண்டும்
அறிய மாறுகிறது ஆழ்மனது

ஆசைகள் அடிக்கடி புயலாய்
அடித்திடும் போதெல்லாம்
தடுப்பணை எழுப்பி
தடுக்கிறது
கருங்கல் மேடெழுப்பிய
அவ்விழிகள் ,

கூச்சத்துக்கு உன்
குணத்தினை சூட்டலாமோ
என்னவளே
வெட்கம் வருகிறது
உன்னை கண்டதும் எனக்கு .
மாறுதல் நிகழ்ந்ததோ பிறப்பில் .

பகலவன் விடியும் பொழுதெல்லாம்
உன் மஞ்சள் பூசிய முகமது
எழுப்பி விடுகிறது
அலைப்பெசியின் அழைப்பின் வாயிலாக .

சிந்தனைகள் மூழ்கி
சிறை செல்லுமோ
நிந்தனைகள் பூடிவிட்ட
காட்சியாகுமோ

விடியும் வரை பேசுகிறோம்
உறக்கம் எனும்
இரவெதற்கு

கண்மூடினாலும்
உன் உருவம் தீண்டும்
என்னதான் செய்வது
பித்து பிடித்ததோ

காலங்கள் மேகத்தில்
மழைவீசும் என்றெண்ணி
நான் இருக்க
வீசும் மழை
அமிலமோ
அக்கினியோ
குளிர்மழையோ
உடைத்திடுமோ ஆலம் மழையோ

வறண்டாமல் இருந்தாலே போதும் .

நம்காதல் செடிக்கு
அதுவும் வேர் நுனிதான் .

கவியரசன் .ம

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு