கடக்கும் நிகழ்காலம்

கடக்கும் நிகழ்காலம்

வெள்ளை காகிதத்தின்
மெத்தையிலே
தவழ்ந்து செல்லும்
கவிதை நீ
பிடித்து எழுதும் எழுத்தாணி .நான்

நான்கில் திசைகள்
மறந்து போனது
குவியம் மொத்தம்
உன் திசை பார்த்தே

விளக்கில்லா இரவினை
போலானதடி
என் வாழ்வும்
மின்மினி
பூச்சியாய் உன் அன்பு

கொஞ்ச நேரம்
மட்டும் இறந்துவிட்டால்
என்ன ?
உன் மூச்சின் பிடியில் சிக்கி
நானும் ,

தேய்ந்து போகிறேன்
உன் கண்மை குச்சியாய்
என் காதல்

விடியல் யாரைத்தான்
எழுப்பிடவில்லை ,
நான் மட்டும் விதிவிலக்கு

காதலின் இரவில்
நிலவும் நான்
காதலின் பகலில்
கதிரும் நான்
உறக்கமேன்பது எனக்கேது ?
உன் விழியின்
மொழி அறிந்த பின்னே

ஒரு தலையாய்
நான் சுற்றினாலும்
சலித்து போகவில்லை
என்னவளே
உன் காற்றில் தக்கையாய்
நான் !

முறுக்கி விடுகிறது
உன் பார்வை
இரும்பாய் என் மனம்

திரும்பி விடுவாய்
என்றே நான்
திரும்பியதில்லை

நிமிடத்தில் பாலைவனம்
நொடியிலே பசுமை வனம்
என்னவோ மாயம்
அனைத்தும் உன்னாலே

நடந்து தான் செல்கிறாய்
நிச்சயம் நடந்து தான் செல்கிறாய்
உறுதி கேட்கிறது
என் விழிகள்
தேவதை அன்றோ
சிறு ஏமாற்றம்

மின்னலின் மறுபெயரோ
உடன் தோன்றி
உடன் மறைகிறாய்
என்னடி உன் நியாயம்
என் பார்வைக்கு மட்டும்

ஒரு நாள் வரும்
உன்னுடன் ஆன என் கனவு

கடக்கும்  நிகழ்காலம்
எனக்குள் நீயடி

கவியரசன் ,.


Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு