கை ஏந்தும் எதிர்காலம்

கை ஏந்தும் எதிர்காலம்

தெருவோரங்களில் விற்கபடுகிறது
ஏழைக்குழந்தைகளின் கல்வி ,
கை ஏந்தும் எதிர்காலம் ,

வண்ண மீனாய் வளர்த்து என்ன பயன்
அலங்காரமோ ,
மீந்த உணவை கூட குப்பையில் கொட்டும்
ஒரு கூட்டமே
பசியால் வாடும் நாங்கள் ஏன் தெரியவில்லை
உம் கண்களுக்கு

கல்வியின் வியாபாரத்தில்
தந்தையின் சொத்து ஏற்றுமதியாகிறது
மதிப்பெண் இறக்குமதி ஆகிறது
நுகர்வோர்
புத்தக புழுக்களே ,

தெருவுக்கு தெரு வீடுகளை
விட ,பள்ளிகளே அதிகம்
இருந்தும்
எழுத்தறிவில்லாதோர் முப்பது சதவிகிதம்
வானில் இருந்து குதித்தவர்களோ

கண்டதை பார்த்திடும்
நம் கண்களுக்கு ,,
இவர்களை கண்டும் பார்பதில்லையே
அது  ஏன்

வாடியதால் வாரப்படும்
குப்பையாகிறது நேற்று
முளைத்த பூக்களும் ,
மாக்கள் எம்மாத்திரம்

மனத்தால் வடிவமைக்கப்பட்டு
உடலால் செய்யபடுகிறது
அநாதை குழந்தைகள்

வானமே வீடாகிறது
குடிசை இவ்வளவு பெரிதோ
அத்தனை வசதிபடைத்தவரோ
இக்குழந்தைகள் ,
கேட்பாரற்று ..

நாதி இல்லாமல் நாய் போல்
இருந்திடும் இவர்களுக்கு
ஒரு வழி சொல்லுங்கள்
மாதர் சங்க கதாநாயகிகளே
பேச வாய் வரவில்லையோ

சொல்லிடும் எனக்கென
என்று யோசிப்போர் பலவிதம்
என்னால் முடிந்ததை கொடுப்பவன் நான் ,
புகழ்ச்சி அல்ல ,

கொண்டு செல்லும் போது கோவணம்
கூட மிஞ்சிடாது என்பது
தெரியாமலே சிலர்
பணம் என்னும் கர்வத்தால்
தன்னை மூடி கொள்கிறார்கள் ,

பசித்திடும் வயிற்றிக்கு
ஒரு வயிறாவது
உணவளித்து பாருங்கள்
கடவுளாவாய்.
மற்றவர் கண்களில்

புண்ணியம் என்பது
பிண்டம் வைத்து வாங்கும்
விலை பொருள் அல்ல .
அது செய்யும் நல்லதில்
ஒளிந்துள்ளது ,

ஒரு ஏழை சிறுவனின் கேள்வி.

வீதியில் எச்சி இலையை கூட
மாடு தின்னட்டும் என
நினைச்சு அதுக்கு போடுறாங்க ,
மீந்தத கூட நமக்கு தராம
வீணாக்குறாங்க
யார்பா ஏழை>>>>>>>???????????

உங்களில் ஒருவன்
பார்ப்பவன் மட்டும் அல்ல ,
கவியரசன் .

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு