காதலுடன் க கற்பனை

காதலுடன் கற்பனை

சூரிய மார்க்கமாய்
மத்திய வெயில் ஒன்று
புவியின் கீழ்த்தளத்தை பார்த்து சிரித்துகொண்டே
தன் அக்கினி வியர்வையை தூருகிறது
நனைகிறேன் நான் அதில் .

உடலின் மொத்த வெப்பமும்
ஒரு புள்ளியில் இனைந்து
கணம் கூட நேரம் விடாமல்
என் நெஞ்சின் அருகே
குளிர்வதாய் ஒரு பொல்லாத நினைப்பு .

கடிகாரம் கொஞ்சிடுமோ
காலம் தான் விடை கேட்குமோ
தென்றல் கூட அனுமதி கேட்கிறது
அவள் என்னை பிரியும் நேரத்தை எதிர்பார்த்து .

விரல்களின் உணர்வுகள்
தொட்டுவிட என்னை கேட்கும்
மூளையின் ஒருவித பகுதி
தானாக கேட்டு அனுமதி மறுக்கபடுகிறது
உடனடி பதில் வந்தது
அவளின் உள்மனம்  கூறியது .

இறக்கைகள் படைக்கவில்லையே
எப்படி பறக்கிறாய் என கேட்டாய் ,
தேவதையின் வாசம் பட்டது
என பதில் கூறுகிறேன் .

வாஞ்சனை கொள்ளாமல்
எப்படி ஒரு கூறிய பார்வை
செல்லமாய் கிழிக்கிறது என்னை மொத்தமாய் .

விதிவிலக்குகள் விலகி செல்கிறது
மதம் என் பாதத்தில் விழுந்து கெஞ்சுகிறது
சாதியின் கோரப்பிடி நேற்றே நசுக்கப்பட்டது
யோசித்து தான் காதலித்தேன்
என தெரியவில்லை ,
ஆனாலும் யோசிக்குறேன்,
அவளின் உன்னத கைவிரல் சுற்றும் நாள் எங்கு என்று /

அவளின் பெற்றோர் புண்ணியம்
செய்தவர்கள் தான்
நிச்சையம் இக்காதல்.
அவர்காது படாமல் ஒருபோதும் நடவாது என்று .

வாழ்த்தட்டும் வாயார
நல்வாழ்க என்று .
நான் ஆவலுடன் இருக்கிறேன்
வாழ்க்கை முழுவதும்
அவள் முந்தானை பூச்சியாய் இருந்திட
அவளின் பாசக்கடலில் மூழ்கி திளைக்க
அன்பின் போர்வையில் மூச்சிரைக்க
அன்னையின் ஒரு பார்வை நான் உணர
அவள் வேண்டும் ,
என் இறுதி மூச்சின் ஆழம் வரை .

அவளின் பெற்றோரும் வேண்டும்
சிறகில்லாமல் பறவை எதற்கு ?

அவள் வானம் வீசும்
வெண்ணிறம் அல்ல .
மங்கள் வீசும் மண்ணிறம் அல்ல
பார்க்க அதுபோதும் என்கிற ஒரு நிறம் .
நிறத்தில் தான் குணமுள்ளது என்றால்
விவாகரத்துகள் நடைபெறும் செய்திகள்
நம் காதின் உள்புறம் செல்லாது .

அவள் அழகும் அல்ல
கலையும் அல்ல
அவள் பார்த்திட மற்றவரோடு
ஒப்பிட்டால் அவள் கலை அல்ல
ஆனாலும் அவளின் சிரிப்பு சத்தம் இடையே
நான் சில்லாய் போனேன் .
என்னை அழைக்கும் சத்தத்திலே
சிலைகல்லாய் ஆனேன் .
நிஜம் இது
அவள் பற்றி புறம் பேச என் மனம் விரும்பவில்லை
உதாரணம் கூறுகிறேன் ,

காதல் தோல்விக்கு
கொலைதான் முடிவானால்
வாழும் பெண்கள் அனைவரும்
இறந்திருப்பார்கள் .நிதர்சனம் .

அவளின் மனதினை நேசியுங்கள்
அவளின் குணங்களை நேசியுங்கள்
அவளின் ஆசைகளை நேசியுங்கள்
உடம்பினை தவிர்த்து /

பெண் சிலை போன்றவள்
பார்க்கும் கண்களில்
கடவுளாய் மதிப்பதும்
காமமாய் தெரிவதும் அவரவர்க்கே .

காதலை காதலிப்பவன் ,
உண்மையாக உங்களில் பலர்போல .
கவியரசன் .

கற்பனை காதலன் .

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு