நிறமிகள் ஏறிடும் கண்

நிறமிகள் ஏறிடும் கண்

கண்கள் முழுதும்
நீரால் நிரம்பிய காலம்
கரையேறி நீயால்
நிரம்புகிறது நித்தம்

வெண்மைக்கும் கருமைக்கும்
மத்தியில் வாழ்ந்த
என் காலங்கள் நிறமி பிடித்து
வழக்கம் மாற்றி
வீசியதும் உன்னாலே ,


வண்ணங்கள் ஏதும் நான்
கண்டதும் இல்லை
கவனிக்கவும் கவனித்திடவும்
வைத்தது உன் கனிவு

வசந்தங்கள் கண்டேன்
முதல் முதலாய்
என் ஸ்பரிசம்
என் கைவிரல் தீண்டுகையில்
வானம் மொத்தம் உன்
கூந்தலாக
காட்சி தந்திடுமோ
என ஒரு வியப்பு

கண்மணிகள் சிந்தாமல்
உன் கண்ணின் மையின்
கரைகொண்டு சூழ்கிறது
என் வாழ்வின் எல்லைகள்

விளக்கேற்றிய நேரம்
பிரகாசிக்கும் விளக்காய்
மஞ்சளான முகம்
பளீருகிறது
என் பார்வையின் குறுக்கே
தாண்டவம் ஏனோ
அழகிலே

வீதிகள் தொடரில்
சாமந்தி பூவின்
வர்ணனையோடு
ஒரு விளையாட்டு
நீ மட்டும் அங்கே நடந்து செல்கிறாய்
என்கிறது என் அகம்

நிழலும் இங்கு
நிறமாய் தெரியுதடி
உன் பின்பம் விழுவதாலோ
இல்லை உந்தன் எதிரோளிப்போ

கட்டில் அடங்காத
காட்டாறாக மாறிவிடுமோ
உன் நெஞ்சம்
என்னிடத்தில்
இதயத்துடிப்பும்
இயந்திர துடிப்பாய்
வெடிக்குமோ
காதலின் சூழ்ச்சமத்தில் ,

நியுரான் எலக்ட்ரான்
எல்லாம் எதற்கு
என்கிறது
மின்சாரம் வீசும்
உன் திமிர் பார்வை ,

தொட்டால் தூக்கிவிடுமோ
என அச்சத்திலே
தெறிகெட்டு ஓடிவிடுகிறது
உன்னை சுற்றும் என் கால்களும்,

நடந்திடும் மழையினை
நான் கண்டதும் இல்லை
வந்ததும் இல்லை
நடக்கிறதே
உருவக பிணைப்போ

எத்துனை தான்
உவமைகள் சொல்ல
உன்னை வைத்து
தீர்ந்தும் போய்விடுகிறது,

கவிதை என்பதை
பொய் என திருத்தம்
செய்தவனை பிடியுங்கள்
உன் கண்ணாடியின் முன்பு
மண்டியிடட்டும் ,

நிறமிகள் ஏறிவிடும் கண் .
உன்
அழகின் அடியேன்
கவியரசன் ,..


Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு