தினம் நிதம்

தினம் நிதம்

இரு இமைகளும்
ஒற்றையாய் கழன்று விழ
கருவிழியின் மச்சம்
தெறித்து உன் உருவம் வரைந்ததுவிடுகிறது
சட்டென முடியும் நேரத்தில்

இதயம் செய்த தசை ஏதோ,
காதல் தசையோ
உன் பெயரின் வசையோ ,

உன் பெயருக்கு அடிமை ஆனதோ
என் கைவிரல்கள்
பார்க்குமிடமொத்தம் உன் பெயர் ,

சிலைகளில் இருந்து
கழண்டு விழுந்து
உன்னில் பொருந்தி கொண்டதோ
அழகே உன் கூர் மூக்கு ,

பால்வழி அண்டங்கள்
கண்டதில்லை யாவரும்
உன் விழியின் அண்டத்திலே
கண்டேனே நான் மட்டும்

வதம் செய்யும் உன்
பார்வையை எதை கொண்டு
நான் மூட
கண்கள் மூடிடவா

மறைந்து மறைந்து
உன்னை காண
என்ன பூச்சியினம் நான் ?
அப்படியாவது இருந்து இருக்கலாம்
உன் பாதத்தின் சூடிலாவது
இதம் கண்டு இருப்பேன் ,,

எந்தவித தூரிகை கொண்டுனை
வரைந்தான் என்பதே தெரியாமல்
உன்னை மெய்துறந்து பார்க்கும்
சிறுவன் போல் நான்  ,
உயிர் வந்து பூண்டதோ
தூரிகையின் நார்களுக்கும் ,

ஆழி பேரலைகளின்
வேகம் என்னவென்று நான் அறியா
உன் வாசத்தின் வேகம்
மட்டும் அறிவேன்
ஒவ்வொரு முறையும் சாய்க்கிறதே
அழகாக

வஞ்சமில்லாமல் வளர்ந்தேனோ
தெரியவில்லை ,
அன்னர்ந்தே பார்க்கிறாய்
என்னையும் நீ

குங்குமம் வைத்துவிட
எட்டிவிடும் உன் பாதத்தின்
அழகும் ,அதையும் நீ
அறியாமல் பார்க்கும் என் அழகும்
ஒன்று சேருமோ
நட்பின் பதவியின்
பதவி பிரமாணம் .காதல்

கனவு காண தூங்கவேண்டும்
என்பது இல்லையே
காதல் கண்டால் மட்டும்
போதுமென என் கருத்து

பாதைகள் இல்லாத
வழிகள் தான் காதல்
ஒவ்வொரு பாதையும்
நீங்கள் அமைத்ததே ,

வெளிச்சங்கள் தேடும்
மந்தை பூச்சியாய்
காதல் நிற்கையில்
வீசிடுமோ புகைதணல்
அடிக்கடி அழவைத்து
சிரிக்கவைத்தும் ,,
வேடிக்கை பார்க்கிறது
கள்ளமில்லாத என் காதலும்

கிறுக்கன் போலவே
யோசிக்க வைக்கிறது
விடியும் முன்னே
விடிந்து விடிகிறது
என் காதல் கனவு ,.
தினம் நிதம்

கவியரசன் ,.

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு