புரியாத புதிர்?

புரியாத புதிர் ?

மனதின் ஓரங்களில்
கரை இருந்திடும் ஒவ்வொரு
நிமிடமும் சிரிப்புகள் பொய்யாய் முடிகிறது .

விடிந்திடும் ஒவ்வொரு
காலைகளும் ஒரே போலதான் இருக்கிறது .
கதிரவன் ஒளிக்கதிர்களுக்கு மட்டுமோ.

பாடல்கள் கேட்கப்படுகிறது .
இன்ப நேரத்தில் இன்பமாக
துன்ப நேரத்தில் துன்பமாக .

விலைகொடுத்து வாங்கப்படும்
பொருட்களில் அன்பும் இணைகிறது.
பொருளால் அன்பு கிடைத்திடுமோ
அடியேன் ,
ஏழைகள் அனைவரும் சைத்தான்களோ .
உங்கள் பணக்கார பார்வைகளில் ..

அதானே சூரிய பொழுதுகளை கூட
கடற்கரையில் கழிக்கும்
கூட்டமல்லவா அந்தஸ்து.
நிர்வாண உடுப்பில்
உடலை மறைத்து .

எல்லோரும் கர்வம் கொள்வதில்லை
உண்மை உழைப்பால் வந்த பணம்
கொண்ட எவரும்
பணக்காரராய் நடப்பதும் இல்லை
உண்மைதானே ..

விடியற்காலை ஓடியும்
பகல் பொழுதில் அமர்ந்துகொண்டும்
இரவு பொழுதுகளில் குடித்தும்
கழிகிறது ,பெரும்பாலான
புள்ளிகளின் வாழ்க்கை ,

எங்கு தொடங்கி எங்கு முடிகிறது
தெரியாமல் அலைந்திடும்
இவர்களின் மனதுகளுக்கு
பேராசை மோகங்கள் மட்டுமே மிச்சம்.

வாழ்வெனும் கடலில்
மூழ்கிய பிறகே தெளிகிறது ,
அவரவர் நித்திரைகள் .

ஆசுவாசம் செய்கிறேன்
என் வருட உழைப்பின் கூலியை
பணக்காரன் ஒரு வேளை
மருந்தாய் உண்பதை கண்டு .

விரலுக்கும் குடலுக்கும்
வலிக்காமல் தின்னபடும்
உணவிற்கு தூய உணவென்னும்
புனைப்பெயர் தீட்டபடுகிறது .

கோடிகளை விழுங்கி
சில்லறைகளை சேவை செய்து
மறைக்கபடுகிறது
அவர் கரைகள் .

வீதியில் எறிந்திடும்
விளக்கினை போலவே அமைகிறது
கூரை ,ஓடுகளின் லட்சணம் ,
வாழ்வு எரிவதும் அணைவதும்
அதுவதின் கைகளிலே

சோர்வென்னும் பெயரில்
உடலை எண்ணையில் தோய்பதும்
உழைப்பெனும் உண்மையில்
சாக்கடை உடலில் தெரிப்பதும்
ஒரே இடத்தில் ,
உள்ளே << வெளியே .>>

காபிகளுக்கு செய்யும் செலவுகளே
மாத ஈடுதல்களுக்கு
இனையாகிறது
ஏற்ற இறக்கம் .

விடைகொடுத்திடாத
பதில்களுக்கு
அர்த்தமற்ற கேள்விகள் என
பெயர்சூட்டி வைக்கபடுகிறது .

புரியாத புதிர் .?
பதில் நீங்களே ,.

ககவியரசன்

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு