இருமண பிரசவம்💓💏

இருமண பிரசவம்

காதல்,
 இருமனங்களுக்கு
இடையே நடக்கும் பிரசவம் அது
தொடும் தொலைவில் இருந்தும்
தொடமுடியாத பனிக்காற்று
உச்சிமீது பளீரென்று அடிக்கும்
பங்குனி வெயில்
தவழ்ந்து வரும் காலில்லாத குழந்தை
வாடியே போகாத ஒரு மலர்
சொற்களால் விளக்க முடியாத
ஒரு கவிதை
எண்ணி பார்க்க முடியாத
பகல் நட்சத்திரம்
பார்வை இல்லாத விழிக்கோளம்

கண்ணிடையே ஊசிபோன்று
உறுத்தாமல் நிற்கும் மாயஜாலம் ,
மந்திர உலகின் கைப்பிடி ,
சுவர்கத்தின் வாசல்படி
நரகத்தின் கொல்லைபுறம்
முள்ளில் இருந்தும் குத்திடாத
ஒருவகை ரோசா
கவிஞ்சர்களின் கருவறை
இளசுகளின் இன்பசுரங்கம்
காற்றிலே செதுக்கிய ஒரு சிற்பம்
தீட்டவே முடியாத சித்திரம்
ராட்ஷச அலைகளின் மேல் கொஞ்சி
விளையாடும் ஜெல்லிமீன்

வெள்ளிச்சம் இல்லாத விளக்கு அது
தோடிராகம் பாடியும் சலிக்காத இசையது
தேடி தேடி அலைந்தும் படம்பிடிக்க
இயலாத படமும் அதுவே
உணர்வுகளின் காட்டாற்று வெள்ளமும் அதுவே


கண்கள் உலகின்
மிகப்பெரிய கொள்ளைகாரர்கள்
பார்த்த நொடியில் எதையும்
கடத்தும் சக்தி அதற்கு
மட்டுமே

அமிர்தமும் அதுவே
நஞ்சும் அதுவே ,

கண்களால் வயப்பட்டு
நெஞ்சத்தால் இடைபட்டு
அலைபேசியில் உறவு வளர்த்து
குறுந்தகவல் கொஞ்சி பேசி
அரைமணி நேரத்திற்காக
அரைநாள் காதிருந்தும்
சாப்பிட்டியா என்ற கேள்விக்காக
சாப்பிடாமல் விரதமிருந்தும்
உண்ணாத பொழுதுகளை
முத்தத்தால் சரி செய்தும்
உடைகின்ற மனதுகளை
காமத்தால் ஓட்டவைத்தும்
களிப்பூட்டும் சிரிக்கின்ற
ஒரு பூகம்பம் ,

எல்லையில்லாமல் செல்லும் சாலை
பள்ளம் மேடுகள் நிச்சயம்
கவலையில்லாத உலகம்
கண்ணீர் மட்டும் நிதர்சனம்

மெல்லமாய் ஊடுருவி
மெதுவாய் அதுவளர்ந்து
இறக்கின்ற காலம் வரை
இடையூறு செய்திடாத
அதிசய நோய்

அண்ணார்ந்து பார்க்கமுடியாத
உயரமான உருவம் அது
கைக்குள் அடங்கிவிடும்
இதயமும்  அது

கண்களின் பசிக்கு
கிட்டிய உணவு

நெஞ்சங்களின் பாஷைகளை
வெளிபடுத்தும் புதியமொழி

உலகின் மொழி பற்றாக்குறைக்கு
முதல் காரணம் காதலே
ஒரே மொழியில் தன்னை
தாழிட்டு கொண்டது ,

உறவுகளை சுருங்கசெய்தும்
உனக்கு நான் என்றும்
எனக்கு நீ என்றும்
தத்துவம் பேசவைக்கும்
அறியாத நிலை

கைப்பேசிக்குள் நீ செல்வாய்
உன்மொத்த கவனத்தையும்
ஒரு இலக்ககாக்கி
நூலிடிழையில் அம்பிடுவாய் ,

கைகள் பம்பரமாக சுழலும்
ஐ லவ் யூ
என்ற வார்த்தை மட்டும்
உன் கட்டுபாடின்றி பதியும்

,காதலால் தான் நாம் பிறந்தோம்
ஆதமும் ஏவாளும் செய்த தவறால்
பிறந்தவர்கள் நாம் என்றால்
அந்த ஆப்பிளும் காதல் தான் ,

காதல் மொழி அறிவதில்லை
காதல் இனம் அறிவதில்லை
ஏன் காதல் ஆண் பெண் கூட அறிவதில்லை

காதல் உன்னத தேசத்து
ஒரு பறவை
மனம் அதன் இருப்பிடம்
வெள்ளை காகிதம் போல
சுத்தமானது அது ,
எழுதியவர் பெயர்மட்டும்
கடைசி வரை அழிவதில்லை
கசக்கி  எரியும் வரை

இது கவிதைகள் சுமந்துவரும்
எலேக்ட்ரோனிக் தூது புறா
இதோ காதல் வழிகிறது
நிச்சயம் பரப்புங்கள் உங்கள்
காதலை ,

கவியரசன் ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு