ஒரு நாள் இரவு

ஒரு நாள் இரவு

பாலைவன பூந்தோட்டமா என்ன
நம் காதல்.,,- அல்லது
பனிவிழும் எரிமலையா
நம் உணர்வு ,தெரிந்து இருந்தால்
இரவில் விடரும் சூரியனாய்
பிறந்து இருக்கலாம் ,,

நான் கண்ணீர் விடும் வேளைகளில்
என் கவிதைகள் தான்
என் கரம் பிடிக்கின்றன

தனிமையின் பிடியில்
தலையணை உறவில்
கண் மூடுகிறேன்
கனவிலே நீ வர ,


  தலையணை நானாக
மடிசேரும்  வேளைகளில்
திளைக்கிறது கன்னி உடல்

தூங்கும் போதே
தெரிந்து விடுகிறது
எழ வேண்டும் என்று
கடினம் தான் ,

அவள் கண்களில் காண்கிறேன்
என் உருவத்தை ,,அவளும் பாவம்
என்னை போலவே கட்டுக்குள் வைத்துள்ளாள்

விடை தெரியாத கேள்விகள்
எங்கள் மனதிலே வேள்வியாய்
தோன்ற ,,

சிரமம் என்று தெரிந்தும்
அவளின் சேலைக் கடலிலே
மூழ்க எட்டிப் பாய்கிறது

கதிரவனும் கைகாட்டி எழுப்புகிறான்
என்னால் தான் இயலவில்லை
உன்னை கனவிலே பிரிய கூட,,

என்ன ஒரு பொறாமை
அவனுக்கு,,- தினமும் நம்
கனவை களைத்து விடுகிறான்

முகம் கழுவாத என்
கண்களில் மங்கலாக வந்து
செல்கிறது அவளின் உருவம்

மஞ்சள் பூசிய அவள் முகத்திடையே
மழுங்கி விடுகிறேன் நான் ,,
விடியல் பொழுதிலே மற்றொரு
சூரியனா,, என்னருகே அவள்

விதி  செய்த சதி என
நினைக்கிறேன் ,இருவரும்
வெவ்வேறாக பிறந்தது

கண் திறந்தே கனவு
காண வேண்டும் என்
கன்னியின் சிரம் இடித்து

நேரம் தான் போதவில்லை
என்னவள் என்னுடன்
இருக்கும் வேளைகளில்,,,

கண்ணோர
கண்ணீருடன் இரவும்
வழியனுப்புகிறது

உன்னை ,,,.,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு