(திரு)நங்கை


இவள் பெண்ணும் இல்லை
ஆணும் இல்லை
ஆனாலும் மனிதன் தான் .,!

கேட்க உறவும் இல்லை
பழக உரிமை இல்லை
அனாலும் உண்மை தான்

இவள் அதிசயம் இல்லை
அசிங்கமும் இல்லை
அனாலும் உயிர் தான்

இவள் எழுத்தும் இல்லை
வடிவமும் இல்லை
அனாலும் ஓவியம் தான்





மனதொன்றும்
மடியோன்றும்
படைத்தவன் ஏனோ
பாலை மட்டும் இரண்டாக
படைத்துவிட்டான் பாவம்
என் தமக்கைக்கு,



உடலில் ஆணை கொண்டு
உயிரில் பெண்ணை
கலந்த கடவுள் தான் பாவம்
தன் சொந்தத்தை புவியிலே
விட்டுவிட்டான்


பண்பில் ஆணாக
பாசத்தில் பெண்ணாக இருக்கும்
இவளும்  ஓர் ஆச்சர்யம் தான்




                                                              தாலிஅறுத்தாலும்
சுமங்கலி தான்
எந்த பெண்ணுக்கும் கிட்டாத
உணர்வு இது ???

வயிற்றுருக்காக பிச்சை
கேட்பினும் தவறில்லை
நமக்கு புண்ணியத்தை
தருகிறாள் !!!


கையை தாட்டி காசு
வாங்கி  ஆசைக்கும்
தெய்வம் இவள்
கோவில்கள் தான் இல்லை !!!


தெய்வங்களை தெருவில்
காண்கிறேன்
உந்தன் வடிவிலே!!!!



கருவறை வைக்க மறந்த
பெண்ணும் இவள்
கதிரவன் ஒளியாக தோன்றும்
ஆணும் இவள்


பருவம் அடையாத கன்னி இவள்
கணவன் இல்லாத மனைவி இவள்
குழந்தை பெறாத தாயும் இவள்
மகிழ்ச்சி இல்லாத சிரிப்பும் இவள்
காசும் இல்லாத கோடிகள் இவள்
கோவில் இல்லாத தெய்வமும் இவள்

என்ன ஒரு ஆச்சர்யம்
“””எந்தன் பார்வையிலே””

                        

                        விழிகள் பேற்றினும் குருடன் போல்
மூச்சு பெற்றினும்  பிணத்தை போல்

அலையும் மாக்களிடையே
மனிதராய் வாழ்வோம்
மற்ற உணர்விற்கும்
மதிப்பு கொடுத்து


இப்படிக்கு உங்கள் தோழனாக
உறவாக அன்பாக

ம.கவியரசன் ...////

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு