அவளும் நானும்💑

அவளும் நானும்

கனவுகள் காணும் வேளையில்
காத்திரு என்ற ஒலி மட்டும் காதுகளில்
கேட்டுவிட்டால் உறக்கம் வருமோ
மின்மினி பூச்சிகளின்
முதுகின் மேலொரு பல்லாக்கு பயணம்
வேண்டாம் என்று அலறும் அளவு
நிரம்பிய பசியின் உணர்வு
காட்டாற்று வெள்ளம் எதோ
என்னுள்ளே ஓடிவருவதாய் ஒரு சிலிர்ப்பு
வாசங்கள் ஏதும் இல்லாத
மலர்போல் ஒரு புன்னகை
வறுமை குடிகொண்ட
என் முகத்தில் இத்தனையும் ,
அந்த கணம் ,

வருடத்தின் மொத்த
வாரங்களையும் சுருக்கி ஒரு நாளில்
தந்துவிட்டு சென்றுவிட்டால்
ஒரு நாழிகையில்
தவமேதும் இல்லாமல்
கிடைத்தவரமோ
இல்லை எனகூரை
பெயர்திழுந்து விழுந்த கனமோ
கனவிதுதானென்று காட்டிட
வந்தவளோ
கருவறை சுவரெழுப்பி
வசித்திட அழைப்பவளோ  எவள் இவள்

வெண்கல பாத்திரமாய்
வெளிர்நிரமாய்
விடியாத பொழுதாய்
விசித்திர உணர்வாய்
வேகமாய் துடிக்கும் இதயமாய்
கொதியாய் கொதிக்கும் குருதியாய்
காற்றடித்து சிறகடிக்கும் ஒரு சிறகாய்
சிறுபிள்ளை சிரிப்பாய்
வானமே வியந்துபோகும்
வெண்ணிலவாய்
எண்ணிலவாய் அவள் ,

கசப்பும் இனிப்பும்
கலந்தது வாழ்வென்று
அறிந்தேனடி உன் கால்களின்
அசைவற்று இரு சக்கர
வாகனத்தில் அமர்ந்ததை கண்டு

என் காதல் அவள் மனதின் மீதே
அவளும் நானும்
தொடரும் ,

என்றும் காதலுடன்
கவியரசன் ,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு