முள்-மழை




விலாசம் தேடுதடி என் விழிகள்
உன் விழி-வழி தருமோ !
கனவுகளோடு சேர்வதற்கு கூட
காரணம் கேட்டு தடைசெய்யும்
உன் உதட்டிடையே என் சொல்வேன்
பதில் கூற மொழி வேண்டி நான்

விரலோடு விரல் சேர்த்து
நடைபழக ஏங்குகிறேன்  
வீதியில் உன்னுடன்  
-குழந்தை

சிணுங்கலோடு அறுந்து விழுகிறேன்
நீ கொறித்து உதறிய
சாக்கிலேட் அட்டையும்
-நானும் ,

மின்னிமறைந்திடும் மின்மினியாய்
இருட்டினில் நீ
மின்சார திருடன்
-நானோ


கருத்துகள் பகிரவே
வாய்மொழிவேண்டும் என
உந்தன் விழி பேச
செவிடனாய் - நான்

முன்தினம் பெய்த “முள்மழையில்”
முளைவிட்ட சிறுசெடியாய் நீ
அருகினில் வேலியாய்
உன் தகப்பன் ஏனோ !

தொடரும் ...
-கவியரசன்.


Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு