கண்மணியே – தொடர்-1
விடியலுக்கு முன்
வியர்க்கின்றது கண்மணியே
விண்தூரம் சென்றாலும்
சொல்லித்தான் செல்வாயே
விழியோரம் கண்ணீராய்
கசிந்து சென்றாயே
ஜன்னலின் ஓரத்தில் அடைமழை
வாசலில் அவள் .
மின்னலின் வடிவத்தில்
அவள்பார்வை
-நிஜ இருட்டு .
இயல்பாய் கடந்த உன்
இரு புருவங்களில்
இயலாமல் போனதென் நெஞ்சம்
மின்சார வருகை
வராமல் வந்ததுபோல்
உன் தொடுகை
நனைந்துபோன உடைகளுக்குள்
சலனமான உடல்
மூச்சுக்காற்றில் முகம் பதிக்க
கொதிக்கிறதே என் தேகம் ...
தொடரும்
Comments
Post a Comment