Posts

Showing posts from 2018

கண்மணியே -3

Image
போர் நடத்தும் அகிம்சை விழிகளில் வீழ்ந்தது என் மனம்  அறவழியில் படுகொலை நடத்தியதோ ? அண்ணார்ந்து பார்த்திடாத அன்னபறவையே அருகே நீ இருக்க எனக்கேன் இவ்வுயிர் வினாகேட்டு விடைதரும் உன் அமைதிக்கு என் மூச்சுகாற்றும் கனா கண்டு நிகழ்வான இன் கணத்திற்கு என் கண்ணீர் துளியும் பதிலுரைக்கும் .. சுவர்க்கம் தேடுகிறேன் அவள் விரலிடையே விரல்பதித்து சுவர்க்கம் தேடுகிறேன்  அவளோடு, விளக்கொளியில் விண்மீன் போதும் சிரித்துகொள்ள சிறுகடி போதும் அமர்ந்துகொள்ள செந்தரை போதும் அருந்திகொள்ள அமுதமும் போதும் , அவள் மட்டும் என்றும் போதும் . தொடரும் ..

கண்மணியே -2

Image
கண்மணியை கண்டதாலோ கண் மணிகளுக்கும் துயில் தொலைவுற்றதோ ,  விடிகாலை வான்கூட உன்காலில் தவழுமடி  சற்றே வெளியே நில் . வாசலில் கோலம் . மணித்துளிகளோடு சேர்ந்திசைக்கும்  என் இதயச்சத்தம் வீதியில் நீ  தொலைவில் நான் . வண்டொன்று வெண்மேகம்  சேர்ந்திடுமோ  வீணென்று நான் சேர்த்த கணங்கள் கரைந்திடுமோ கனவுக்குள் சிறைப்பட்டு தவிக்கின்றேன் சற்றே இமைதிற எனை காண்... இவ்வாழ்வேன்று நான் பார்ப்பது அதுவே ,,

கண்மணியே – தொடர்-1

Image
விடியலுக்கு முன் வியர்க்கின்றது கண்மணியே விண்தூரம் சென்றாலும் சொல்லித்தான் செல்வாயே விழியோரம் கண்ணீராய் கசிந்து சென்றாயே ஜன்னலின் ஓரத்தில் அடைமழை வாசலில் அவள் . மின்னலின் வடிவத்தில் அவள்பார்வை -நிஜ இருட்டு . இயல்பாய் கடந்த உன் இரு புருவங்களில் இயலாமல் போனதென் நெஞ்சம் மின்சார வருகை வராமல் வந்தது போல் உன் தொடுகை நனைந்துபோன உடைகளுக்குள் சலனமான உடல் மூச்சுக்காற்றில் முகம் பதிக்க கொதிக்கிறதே என் தேகம் ... தொடரும்

முள்-மழை

Image
விலாசம் தேடுதடி என் விழிகள் உன் விழி-வழி தருமோ ! கனவுகளோடு சேர்வதற்கு கூட காரணம் கேட்டு தடைசெய்யும் உன் உதட்டிடையே என் சொல்வேன் பதில் கூற மொழி வேண்டி நான் விரலோடு விரல் சேர்த்து நடைபழக ஏங்குகிறேன்   வீதியில் உன்னுடன்   -குழந்தை சிணுங்கலோடு அறுந்து விழுகிறேன் நீ கொறித்து உதறிய சாக்கிலேட் அட்டையும் -நானும் , மின்னிமறைந்திடும் மின்மினியாய் இருட்டினில் நீ மின்சார திருடன் -நானோ கருத்துகள் பகிரவே வாய்மொழிவேண்டும் என உந்தன் விழி பேச செவிடனாய் - நான் முன்தினம் பெய்த “முள்மழையில்” முளைவிட்ட சிறுசெடியாய் நீ அருகினில் வேலியாய் உன் தகப்பன் ஏனோ ! தொடரும் ... -கவியரசன்.

ஒரு ஜான் வயிறு

            விடிகின்ற பொழுதினில் வியர்த்து துடைக்க , திரிகின்ற வயதினில் உழைத்து விதைக்க மலர்கொண்ட நேரத்தில் மனதை நிறுத்த மதிகொண்ட பாசமோ கண்ணை மறைக்க காதலிங்கு வரவில்லை என் அம்மா ! என் காத்திருக்கும் உறவிடையே காப்புரைத்த கையுடனே நானம்மா ! -(தொடரும்) ம.கவியரசன் .